Wednesday 3 September 2014

வா.உ.சி.

இந்திய சுதந்திர போரட்ட வீரர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம். உங்களது தியாகத்தால் தான் இன்று நான் நிம்மதியாக வாழ முடிகிறது.

திரு. வ.உ.சிதம்பரம் அவர்கள் கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படுகிறார். நிச்சியமாக அதற்க்காக நானும் பெருமைப்படுகிறேன்.

ஆனால், கப்பல் ஒட்டியதற்க்கும் சுதந்திரப்போரட்டத்திற்க்கும் என்ன சம்மந்தம்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நல்ல லாபத்துடன் கப்பல் ஓட்டும் தொழில் செய்து கொண்டிருந்தனர்.

வழக்கறிஞரான திரு. சிதம்பரத்திற்க்கு நல்ல தொழிலாக தெரிந்திருக்கும். எனவே பலரிடம் காசு பெற்று கப்பல் வாங்கியுள்ளார்.

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஏற்கனவே தொழில் செய்பவர்களுடன் போட்டி போட்டு தொழில் நடத்த வேண்டிய சூழ்நிலை எப்போதும் உண்டு. அதற்கு இரண்டு வழிகள். முதலில் கட்டணத்தை குறைக்க வேண்டும். அது போல தான் அவர் குறைந்த கட்டணம் வசூலித்துள்ளார். இது இந்தியர்களுக்காக அவர் ஏதோ மிக குறைந்த கட்டணத்தில் சேவை அளித்தார் என்று சொல்ல முடியாது. வாடிக்கையாளர்களை கவர பல விளம்பரங்களை செய்வார்கள். அதன் படி இவர் தமிழர்களே இந்தியர்களே தமிழன்/இந்தியன் நடத்தும் கப்பலில் பயணம் செய்யுங்கள் என்று விளம்பரப்படுத்தியுள்ளார். அது தமிழர்கள் மீது பற்று அல்ல . நிறைய வாடிக்கையாளர்களை கவர செய்த விளம்பரம்.

ஏற்கனவே கப்பல் தொழிலில் இருந்தவர்கள் கட்டணத்தை குறைத்து, திரு. சிதம்பரம் அவர்கள் அந்த அளவுக்கு கட்டணத்தை குறைத்தால், அவருக்கு கட்டுப்படியாகது எனவே அவர் கப்பல் கம்பெனியை மூடி விடுவார் என்று அவர்கள் கட்டணத்தை குறைத்துள்ளனர்.

இது எல்லா காலத்திலும் எல்லா தொழில்களிலும் நடக்கும் செயல்.
ஆங்கிலேயர்கள் திரு.சிதம்பரம் அவர்களை கப்பல் கம்பெனியை நடத்த விடாமல், சுதந்திரப்போரட்டத்தை நடத்த விடாமல் நசுக்கி விட்டனர் என்று சரித்திரம் எழுதி வைத்திருப்பது அபத்தம். இது ஒரு தொழில் முறை போட்டி மட்டும் தான் . இதற்க்கும் சுதந்திரம்போரட்டத்திற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இவர் கப்பல் கம்பெனி நடத்த கூடாது என்று எண்ணியிருந்தால் அதை தடுக்க ஆங்கிலேயர்களுக்கு பல வழிகள் இருந்தது.

அந்த காலத்தில் இந்தியர்கள்/தமிழர்கள் யாரும் கப்பல் கட்டும் தொழிலில் ஈடுப்படவில்லை. தோணிகள் மட்டுமே கட்டி வியாபாரம் செய்தனர். பயணிகளும் பயணம் செய்தனர். திரு. சிதம்பரம் அவர்கள் ஏன் தோணி தொழிலில் ஈடுப்படாமல், கப்பல் ஓட்டும் தொழிலை தேர்ந்தெடுத்தார்.
ஆங்கிலேயர்களின் கப்பலை இவர் வாங்கியுள்ளார். ஆங்கிலேயர்கள் நினைத்திருந்தால் சுதந்திரப்போரட்டத்தில் ஈடுபட்டுள்ளவருக்கு கப்பலை விற்க அனுமதி தராமல் இருந்திருக்கலாம். அவர் ஏற்கனவே கப்பலை ஓட்டிக்கொண்டிருந்த இந்தியர்களிடமிருந்து பம்பாயிலிருந்து கப்பலை வாங்கியிருந்தாலும் அதை தமிழக துறைமுகங்களிலிருந்து ஓட்ட அனுமதி அளிக்க மறுத்திருக்கலாம்.

ஆங்கிலேயர்கள் கப்பலை வாங்கவும் இயக்கவும் தொழில் செய்யவும் அனுமதியளித்துள்ளனர். ஆனால், அவர்கள் நட்டம் அடையும் விதத்தில் இவர் தொழில் நடத்தியதால் தான் இவர் கப்பல் நடத்த முடியாதபடி , தொழிலில் நட்டமடையும் படி செய்துள்ளனர்.

திரு. சிதம்பரம் அவர்கள் கப்பல் ஓட்டியதும், ஆங்கிலேயர்கள் அவர் தொழிலை நட்டமடைய செய்ததும் தொழில் ரீதியான சம்பவம் மட்டுமே. அதற்க்கும் சுதந்திரப்போரட்த்திற்க்கும் சம்மந்தமில்லை.

மற்றப்படி அவர் நாட்டின் சுதந்திரத்துக்காக செய்த வேறு பல தியாகங்களும், அனுபவித்த இன்னல்களும் நன்றியுடன் நினைவு கூறதக்கது. போற்றத்தக்கது.
அவரின் இறுதி காலத்தில் அவர் அடைந்த துன்பங்களுக்கு தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.

எந்த சுதந்திரப்போரட்ட வீரரையும் இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை.

No comments:

Post a Comment