Tuesday 30 September 2014

மலர் மஞ்சம் - தி.ஜானகிராமன்













எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய நாவல்களில் “ மலர் மஞ்சம் “ என்ற நாவலும் ஒன்று. 1961ஆம் ஆண்டு எழுதப்பட்ட 600 பக்கங்கள் கொண்ட நாவல்.

கிராமத்தையும் நகரத்தையும் இனைத்து எழுதிய நாவல். பெண்ணின் மனதில் சூழ்நிலை காரணமாக ஏற்ப்படும் மன மாறுதல்கள விவரிக்கும் கதை. வழக்கமான எளிய நடை. தொடர்ந்து படிக்கும் ஆவலை தூண்டும் நாவல்.

எளிமையாக சிக்கல் இல்லாமல் அனைவரும் விரும்பி படிக்கும் நாவல் என்பதை தவிர வேறு சிறப்பு அம்சங்கள் ஏதும் இல்லை.


மலர் மஞ்சம் – கதை சுருக்கம்:

 

ராமய்யாவின் நாலவது மனைவியின் பிரசவ நிகழ்ச்சியிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. முதல் மூன்று மனைவிகளும் இறந்து விட்டனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நாலாவது மனைவி அகிலான்டம் பெண் குழந்தை பெறுகிறாள். ராமையா பெண் குழந்தையா என்று கூறுகிறார். மனைவி அகிலான்டம் பெண் குழந்தை என்றால் என்ன நம்ம சொர்ணக்கா மகனுக்கு கட்டி கொடுத்து விடலாம் என்று சொல்லி அங்கேயே நிச்சயம் செய்து விடுகின்றனர். பிறந்த குழந்தை கண் விழிப்பதற்க்கு முன்பே குழந்தைக்கு கணவன் நிச்சயம் செய்யப்படுகிறது. மனைவி அகிலான்டம் அப்போதே இறந்து விடுகிறாள்,

குழந்தை பாலம்பிகை என்ற பெயரில் மிக அழகாகவும், புத்திசாலியாகவும் வளர்கிறது.

ராமையாவின் எதிர்வீட்டில் வசிப்பவர் வையன்னா ஊர் வம்பு பேசி அங்குள்ள மக்களுக்கு தொந்தரவு கொடுப்பவர். ராமையாவுக்கும் தொந்தரவு கொடுப்பவர்.

ராமையா கூத்து கத்து கொடுத்து ஊரில் கூத்து நடத்துவார். ஊரில் அவருக்கு சொந்தமான தரிசு நிலத்தை அவர் ஒருவரே சரி செய்து, சோலையா மாற்றி அதில்  ஒரு குடிசையை கட்டிக்கொண்டு பகல் முழுக்க அங்கு வாழ்பவர். அவரது சொந்தக்காரர் வடிவு என்ற பெண்மணி வீட்டோடு இருந்து கொண்டு குழந்தையை வளர்க்கிறார்.

வையன்னா தன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பெண் தங்கம்மாளிடம் பல சொத்துகள் கொடுப்பதாக கூறி உறவு வைத்துக்கொள்கிறார். பின்பு ஏமாற்றி விடுகிறார். அவள் வழக்கு தொடுக்கிறாள். ராமையா சாட்சி சொல்கிறார். வையன்னாவுக்கு தண்டனை கிடைக்கிறது. வையன்னா ராமையாவின் தோட்டத்தை அழித்து விடுகிறார்.

தனது நிலபுலங்களை பழகியவர்களை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு சென்னை வருகிறார். அவரது கிராமத்திலிருந்து வந்து ஏற்கனவே சென்னையில் வாழும் நாயக்கர் அவர்க்கு பலரை அறிமுகம் செய்து வைக்கிறார். அதில் வக்கீலும் ஒருவர். அவரது பேரன் ராஜா.

பாலம்பிகை வக்கீல் சொல்லியபடி பரதநாட்டியம் கற்றுக்கொள்கிறாள். சொர்னக்காவின் மகன் தங்கராஜ் ( குழந்தையாக இருக்கும் போது நிச்சியக்கப்பட்டவன்) கல்லூரியில் படிக்கிறான். ராஜாவும் வேறு கல்லூரியில் படிக்கிறான்.

பாலம்பிகைக்கு தங்கராஜ் பிடித்திருக்கிறது. திருமணம் செய்வதில் ஆட்சேபனையில்லை. அதே சமயம் ராஜா மீது ஈர்ப்பு ஏற்ப்படுகிறது.

நாயக்கரின் மகன் நாடகம் நடத்துவதாக கூறி சொத்தை அழித்து கடன்காரன் ஆகிறான். அவனை சந்திக்கும் பாலம்பிகை தான் நடனம் ஆடி அவனது கடனை அடைப்பதாக கூறுகிறாள். அதற்கு முன்னோட்டமாக ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் முன்பு நடனம் ஆடுகிறாள். தந்தை ராமையாவுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறாள்.

பின்பு ராமையாவுக்கும் ஊருக்கும் தெரிகிறது. ராமையா எதிர்ப்பு சொல்லாமல் ஆதரிக்கிறார். வையன்னா தேவதாசியா என்று கேட்கிறார். வையன்னா கொலை செய்யப்படுகிறார்.  அவரால் கெடுக்கப்பட்ட பெண் அந்த நேரம் கானாமல் போகிறார்.

பாலம்பிகை தான் ராஜாவை விரும்புவதாக தந்டையிடம் கூறுகிறாள். ராமையா கிராமத்தில் உள்ள சொத்துக்களை விற்று நாயக்கர் மகன் கடனை அடைத்து விடுவதாகவும், கடனை அடைக்க அவள் நாட்டியம் ஆட வேண்டாம் என்று கூறி அவ்வாறே செய்கிறார்.

பாலம்பிகையிடம் தங்கராஜ் வையன்னாவை தான் தான் கொலை செய்ததாக கூறுகிறான். உன்னை தேவதாசி என்று கூறியதால், கோபம் கொண்டு கொலை செய்ததாக கூறுகிறான். நீ ராஜாவை விரும்புவதாக இருந்தால் அவனை திருமணம் செய்து கொள் என்கிறான். 

பாலாம்பிகை தங்கராஜை திருமணம் செய்து கொள்கிறாள். ராஜா வேறு ஊருக்கு வேலைக்கு போய் விடுகிறான்.

காசியிலிருந்து ராமையாவுக்கு கடிதம் வருகிறது, அங்கு அக்கா வடிவுடன் செல்கிறார். நாயக்கர் அங்கு சந்நியாசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வையன்னாவை கொலை செய்ததாக கூறப்படும் பெண் அங்கு இருக்கிறாள். நாயக்கர் அங்கு மரணமடைகிறார். அவர் விருப்பப்படி ராமையா அவருக்கு இறுதி சடங்கு செய்கிறார்.

No comments:

Post a Comment