Friday 12 September 2014

FINDING FANNY – இந்தி திரைப்படம்



FINDING FANNY – இந்தி திரைப்படம்


கோவாவில் உள்ள சிறிய கிராம பகுதியில் நடக்கும் கதை. கிராமத்தில் பெரிதாக ஒன்றும் நடப்பதில்லை. வெட்டி பேச்சு பேசிக்கொண்டு வாழ்க்கை நடத்தும் கிராம மக்கள்.

வயதான தபால்காரர் (Naseeruddin Shah) ஒருவருக்கு ஒரு கடிதம் வருகிறது. அதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அது அவர் தனது காதலிக்கு 46 வருடங்களுக்கு முன்பு காதலை தெரிவித்து ஏற்றுக்கொள்ளுமாறு எழுதிய கடிதம். அது அவளுக்கு போய் சேராமல் திரும்பி வந்த கடிதம். இவர் தனது காதலை அவள் ஏற்க்கவில்லையென்று நினைத்து தனிமையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவரது வீட்டருகில் பெரிய பிட்டங்களுடன் வசிக்கும் (Dimple Kapadia)  மாமியார் மற்றும் விதவை மருமகள் (Deepika Padukone). திருமணத்தன்றே அவளது கணவன் இறந்து விடுவதால் மாமியாருடன் வசிக்கிறாள்.

தனக்கு வந்த கடிதத்தை பற்றி தீபிகாவிடம் கூறுகிறார்.  தீபீகா உங்களுடைய காதலியை கண்டுபிடித்து உங்களது காதலை சொல்லுங்கள் என்று கூறுகிறாள்.

அதே கிராமத்தில் ஓவியன் ஒருவன் (Pankaj Kapur) வாழ்ந்து வருகிறான். அதே சமயம் ஊரை விட்டு வெளியேறிய இளைஞன் (Arjun Kapoor) ஊருக்கு திரும்பி வந்துள்ளான். அவன் தனது தந்தை வீட்டில் வாழ்கிறான். அங்கு இருக்கும் பழைய காரை சரி செய்து ஓவியனுக்கு விற்றுள்ளான். பம்பாயில் தொழில் நடத்திக்கொண்டிருப்பதாக பொய் கூறுகிறான். தீபீகாவும் அர்ஜூனும் பழைய நண்பர்கள். தீபீகாவுக்கு திருமண ஆன நாளன்று யாருக்கும் சொல்லாமல் ஊரை விட்டு கிளம்பியவன் ஆறு வருடம் கழித்து திரும்பியுள்ளான்.

அர்ஜூனுக்கு கார் ஓட்ட தெரியும் என்பதாலும், அது ஓவியனின் கார் என்பதாலும் எல்லோரும் சேர்ந்து நஸ்ருதினின் காதலியை (Anjali Patil) ( அவளது செல்ல பெயர் FANNY ) தேடி புறப்படுகின்றனர். எல்லோரும் வாழ்க்கையில் பிடிமானம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதால், இந்த பயணம் மாறுதலாக இருக்கும் என்று கிளம்புகின்றனர்.

அவளது விலாசத்தில் அவள் இல்லாததால் அவள் இருக்குமிடம் தேடி செல்கின்றனர். வழியில் ஏற்படும் பல சுவரஸ்யமான சம்பவங்களுடன் கடந்து செல்கின்றனர். வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விடுவதால், இரவு வெட்ட வெளியில் தங்குகின்றனர்.

ஓவியனுக்கு பெரிய பிட்டங்களிடம் ஈர்ப்பு ஏற்ப்படுகிறது. தீபிகாவும், அர்ஜூனும் பழைய விசயங்களை பேசுகின்றனர். அவன் வீட்டை சுத்தம் செய்யும் போது அந்த கடிதம் கிடைத்ததாகவும், அதை தான் தான் நஸ்ருதின் வீட்டில் போட்டதாகவும் கூறுகிறான். அவனது அப்பா தான் அந்த கிராமத்தின் போஸ்ட் மாஸ்டர். அவன் அவளை காதலித்ததாக கூறுகிறான். தீபிகா நீ காதலை சொல்லாததால் வேறு ஒருவனை மணந்தேன் என்கிறாள். இரவு வெட்ட வெளியில் உறவு கொள்கின்றனர்.

நஸ்ருதீன் புறப்பட்டு சென்று பெட்ரோலுடன் வந்து , பின்பு எனது காதலியை நானே கண்டுபிடித்து கொள்கிறேன் என்று எழுதி வைத்து விட்டு புறப்பட்டு செல்கிறார். மற்றவர்கள் காரில் போய்க்கொண்டிருக்கும் போது அவரை கண்டுபிடித்து ஊர் திரும்புகின்றனர். அப்போது ஒரு சவ ஊர்வலம் வருகி’றது. அதில் நடந்து வரும் ஒரு பெண்ணை பார்த்து அவள் தான் FANNY  என கண்டுபிடித்து அவளிடம் பேசும் போது, அவள் FANNYயின் மகள் என தெரிந்து FANNY  எங்கே என்று கேட்கும் போது, இறந்த உடலை காண்பிக்கிறாள். அவரால் அடையாளம் கானமுடியவில்லை. உடல் திருமண உடையில் இருக்கிறது. அவள் என்னை நினைத்து இவ்வளவு காலம் இருந்து விட்டு இப்போது தான் திருமணம் செய்யும் நிலையில் இறந்தாளா என கேட்கிறார். மற்றவர் இது இவளுக்கு நாலாவது திருமணம் என்கிறார். மேலும், என்னை பற்றி ஏதாவது கூறினாளா என மகளிடம் கேட்க அவள் , அவளது அம்மா பல காதலர்களின் பெயரை கூறியிருக்கிறாள் ஆனால் ஒரு நாளும் உங்களது பெயரை கூறியதில்லை என்றும் அவள் ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தாள் என்றும் கூறுகிறாள்.

எல்லோரும் ஊர் திரும்புகின்றனர். நஸ்ருதினும் டிம்பிள் கபாடியாவும் திருமணம் செய்வதோடு முடிவடைகிறது.

நஸ்ருதின் , பங்கஜ் கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா இவர்களது நடிப்பு அருமை. அனுபவப்பட்ட நடிப்பு. நஸ்ருதின் பழைய நினைவுகளில் போகும் போது, அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

டிம்பிள் கபாடியாவும் தனது பாத்திரத்தை அருமையாக செய்துள்ளார். பங்கஜ் கபூரும் சிறப்பாக செய்துள்ளார்.

அர்ஜூன் கபூரும் தீபிகாவும் முக்கிய பாத்திரங்கள் என்று சொல்ல முடியாது. அவர்களது வழக்கமான நடிப்பில் இருந்து விலகி அடக்கி வாசித்துள்ளார்கள். இல்லாத கவர்ச்சியை காட்ட தீபிகா மிகவும் முயற்சித்துள்ளார்.

வழக்கமான பாடல்கள் இல்லை. சண்டை காட்சிகள் இல்லை. ஆடை அலங்காரங்கள் இல்லை. 

கதை நடக்கும் கிராமம் ரம்மியமாக உள்ளது. பயணம் செய்யும் பாதையும் அழகாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கதையுடன் இனைந்து பின்னனியில் இரு பாடல்கள் ஒலிக்கிறது.

2 மணி நேர படம். ஒரு 15 நிமிடத்தை குறைத்திருந்தால் கதை வேகமாக நகர்ந்ததாக அமைந்திருக்கும்.

இது விருது பெறும். விருதுக்காக தயாரிக்கப்படும் படம் போன்றது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக வெற்றி பெற வாய்பில்லை. 

இந்த படத்தை கருப்பு வெள்ளையில் எடுத்திருந்தால், உலக திரைப்படம், மாற்று திரைப்படம் என்று கொண்டாடியிருக்கலாம்.

திரையரங்கில் ரசிக்கலாம். இனையத்தில் இலவசமாக கிடைத்தாலும் பாருங்கள்.

 Finding Fanny Theatrical release poster.jpg

No comments:

Post a Comment