Friday 5 September 2014

ரப்பர் - ஜெய மோகன்



திரு.ஜெய மோகனின் முதல் நாவல்ரப்பர்ஐ நேற்று படித்தேன். 1990ல் வெளி வந்த நாவல்

இத்தனை வருடங்களாக இதில் எழுத்துலகில் இயங்கி கொண்டிருப்பதே ஒரு சாதனை தான். முதல் நாவலுக்கும் அவருடைய இன்றைய எழுத்துக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நாவல் முழுவதும் மலையாள மொழி வாடை இருக்கிறது. மொழியை புரிந்து கொள்ள நேரம் ஆகிறது. முழுவதுமாக புரிந்து கொண்டேன் என்று கூற முடியாது.

ரப்பரின் மணம் குறைவாகவே இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக அந்தஸ்து பெற்று வாழ முடியாமல் இருந்த காலத்தில் , அவர்கள் ரப்பர் மரங்களை பயிரிட்டு அதன் மூலம் செல்வந்தர்கள் ஆனதையும் அதற்கு பிறகு அவர்கள் சமூகத்தில் மதிக்கப்பட்டதையும் கூறும் கதை

அதில் ஒரு குடும்பத்தின் கதை கூறப்பட்டுள்ளது. செல்வந்தர் ஆனதும், கேரளாவில் ஏற்ப்பட்ட ஆட்சி மாற்றத்தால் , அந்த குடும்பம் அதால பாதாள நிலைக்கு செல்ல நேர்ந்ததை விவரித்துள்ளார்.

ரப்பர் மரத்தினால் ஏற்ப்படும் நன்மை தீமைகளை பற்றியோ, மரத்திலிருந்து பால் எடுக்கும் முறை பற்றியோ அதில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளிகளை பற்றியோ ஏதும் கூறவில்லை. ரப்பர் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அதில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பது பற்றி ஏதும் விவரிக்கப்படவில்லை. ஒரு குடும்பத்தின் நகழ்ச்சிகள் தான் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது.

இறுதியில், ரப்பர் மரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை என்றும் , நிலத்தடி நீர் முற்றிலுமாக உறிஞசப்பட்டு, ஆறு வறண்டு விட்டது என்று ஒரு கதாபாத்திரத்தின் மூலம் கூறி, சுற்றுபுற சூழ்நிலை குறித்து விழிப்புனர்வை ஏற்ப்படுத்த ஒரு சங்கம் அமைக்க வேண்டும் என்பது போல கதையை முடித்துள்ளார்.

ரப்பர் வேண்டும் ஆனால் என்று கூறி அதனால் ஏற்ப்படும் தீமைகளை எப்படி நீக்குவது என்று கூற முடியாமல் அப்படியே விட்டு விட்டார்.

அவர் அதற்கான தீர்வு என்று ஏதும் கூறவில்லை. தீர்வு கூறுவதும் கடினம் தான். இன்றளவும் அந்த பிரச்சனை இருக்கிறது.

 

No comments:

Post a Comment