Saturday 6 September 2014

மேகா - திரைப்படம்



மேகா – திரை விமர்சனம்

அழகான காதல் கதை. கதையை பற்றி சொல்வதற்க்கு முன்பு இதில் இருக்கும் சிறப்பு அம்சங்களை கூறுகிறேன்.

தாடி மீசை வைத்து அராஜகம் செய்யும் சமூக விரோதி கதை அல்ல. உள்ளாடை தெரியும் அளவுக்கு லுங்கி கட்டிக்கொண்டு ஆபாச நடனமாடும் குத்து பாட்டு இல்லை. டாஸ்மாக் கடைகளில் குடிக்கும் காட்சிகள் இல்லை.அப்படிபட்டவனுக்கு அமையும் வெள்ளை பன்னி போன்ற கதாநாயகி இல்லை. பத்து இருபது பேரை புரட்டி எடுக்கும் சண்டை காட்சிகள் இல்லை. நகைச்சுவை என்ற பேரில் இரட்டை அர்தத்துடன் கதாநாயகனுடன் பேசும் நண்பன் இல்லை. கதைகிழிக்கும் இசை இல்லை. ஜாதி அரசியல் இல்லை. கதாநாயகன் நாயகி உடம்பை காட்டும் காட்சி இல்லை.

முதல் பாதியில் அழகான காதல் கதை. சின்ன சின்ன வசனங்கள். மனசை சந்தோசப்படுத்தும் காட்சிகள். முதல் பாடலில் ஓளிப்பதிவு மிகவும் நன்றாக இருந்தது. முழு படத்திலும் ஓளிப்பதிவு நன்றாக உள்ளது. காதை கிழிக்காத பின்னனி இசை. நீண்ட காலத்துக்கு பின்பு இளையராஜா இசை.

மிகவும் சாதாரண காதல் கதை. வழக்கமான பெண் வீடாரிடமிருந்து எதிர்ப்பு என்ற வில்லன் இல்லாமல் வேறு மாதிரியான எதிர்ப்பு. பரபரப்பை ஏற்ப்படுத்தவில்லையென்றாலும் பொறுத்திருந்து பார்க்க வைத்துள்ளார்கள். ஒரு மரணத்தை கொலை என்று ஆராயம் நாயகனுக்கு ஏற்ப்படும் சிக்கல்கள். அவ்வளவு தான் கதை.

வழக்கம் போல் காதலி கடத்தப்படுகிறார் உயிருக்கு ஆபத்து என்று சொல்லப்பட்டவர், நினைவு திரும்ப வாய்ப்பு இல்லை என்று சொல்லப்பட்ட கதாநாயகி ஆறு மாதத்தில் குணமடைந்து  காதலனுடன் சுற்றுகிறார். கதாநாயகன் செய்த கொலை என்னவாயிற்று. எதையும் கூறாமல் அப்படியே கதையை முடித்து விட்டனர். கதையை முடிக்க தெரியவில்லை. அவசியமில்லை என்று கருதியிருக்கலாம்.

நாயகன் ஆஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போது நடிப்பை மேம்படுத்தி கொண்டால் சில வருடம் தாக்கு பிடிக்க முடியும்.  இயக்குனர் கார்த்திக் ரிஷி மிக எளிமையான கதையை எந்த திருப்பங்ளும் வைக்காமல் தெளிவாக சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளரின் காசை வீனாக்கவில்லை. ஆனால், இப்படி பட்ட இயக்கத்தை தொடர்ந்து செய்தால் திரையுலகில் நீடிப்பது சிரமம்.

பார்க்க வேண்டிய படம் என்று சிபாரிசு செய்ய முடியாது. பார்த்தால் பாதகமில்லை..


 

No comments:

Post a Comment