Monday 15 September 2014

கொற்கை - புத்தக ஆய்வு







அன்புள்ள குருஸ் அவர்களுக்கு,                            03.09.2014

சாகத்திய அகதெமி பரிசு பெற்ற உங்களது கொற்கை கதையை படிக்க வாய்ப்பு கிடைத்த்து. அதை பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விரும்பி படிக்க ஆரம்பித்து, கதையில் தொய்வு விழும் போது வீம்புக்காக படித்து, பின்பு முழு வரலாற்றை அறியும் பொருட்டு மிக நிதானமாக விரும்பி படித்தேன்.


ஒரு நூற்றான்டின் கதை. கதை களமும் காலமுமே கதையின் நாயகர்கள். அதில் வாழும் மனிதர்கள் யாவரும் நிழல்களாய் மறைந்து விடுகின்றனர். அவர்கள் கட்டிக்காத்து விட்டு செல்லும் அனைத்துமே காலத்தால் அபகரிக்கப்படுகிறது.

இதை ஒரு சமூக நாவல் என்பதா அல்லது சரித்திர நாவல் என்பதா ?

காலம்ஒரு நூற்றாண்டின் ஆரம்பமும் முடிவும் 1914 முதல் 2000 . கொற்கையில் ஆங்கிலேய மக்களின்  அதிகாரம்விடுதலை போராட்டம்சுதந்திர இந்தியாவின் ஆட்சி.

காலம் கடப்பதை அந்த மண்ணில் நடக்கும் மாற்றங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்ப்படும் மாற்றங்கள் மூலமாக , அவர்களது 3 வது தலைமுறை வாழ்கையுடன் முடிவு செய்துள்ளீர்கள்.  கொற்கையில் இந்த கால கட்டத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் சொல்ல முயற்சிக்கும் சமூக வரலாற்று கதை. முழுமையாக சொல்ல முடியாவிட்டாலும் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டடிருக்கிறது

களம்கடற்கரை சார்ந்த நிலப்பரப்பு. கடலை சார்ந்து வாழ்க்கை நடத்தும் மக்கள். கடலில் பயணிக்கும் தோணி முக்கிய கதாபாத்திரம். தோணியின் உடற்கூறுகள், அதன் ஆடைகள் ,  காற்றின் திசைக்கேற்ப நீரின் ஓட்டத்திற்க்கேற்ப்ப அதற்கு ஆடை மாற்றி விடும் பரதவர்கள். இவைகளை படம் வரைந்து விளக்கியிருப்பது , அனைவரும் புரிந்து கொள்ள வசதியாய் இருக்கிறது.

தோணியை சொந்தமாக்கி கொள்வதே வாழ்வில் லட்சியமாக கொண்ட மக்கள் தன் கட்டுப்பாட்டுக்குள் அதை வைத்துக்கொள்ள விரும்பும் தண்டல்களின் ( தலைவர்) வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்.

முத்து குளிப்பது, சங்கு எடுப்பது, மீன் பிடிப்பது இவையே இந்த களத்தில் வாழும் மக்களின் தொழில். மீன் பிடி தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் மக்களின் கதையாக மட்டுமே இருக்கும் என்ற முன் முடிவுடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், மீனவர்கள் வாழ்க்கை சில பத்திகளில் மட்டுமே உள்ளது. தோணி தொழிலாளர்கள் அவர்களது தொழில் விரிவாக உள்ளது. அங்கு மற்ற தொழிகள் செய்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை குறிப்பிடப்படவில்லை. இன்றைக்கு தலித் என்று சொல்லப்படும் மக்களின் வாழ்க்கை விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உப்பளங்களும் இருந்துள்ளது. சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரப்போரட்ட காலத்தில், உப்பு சத்தியாகிரக போரட்ட காலத்தில் இங்கு அதன் தாக்கம் என்னவாக இருந்தது என குறிப்பிட்டிருக்கலாம்.

அந்த தொழில் சார்ந்து வாழும் மக்கள், வியாபாரிகள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் , அவர்களது இறக்குமதி பொருட்களை கடலிலிருந்து கரைக்கு கொண்டு வருவது ; சரக்குகளை பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல தோணிகளை பயன்படுத்துவது. – சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு வாழ்ந்த மக்களின் குடும்ப பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிராதயங்கள், விழாக்கள் இவைகள் குறிப்பிடப்படவில்லை.

கலை இலக்கியம் போன்றவற்றில் கொற்கை மக்களின் பங்கு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மொழிமொத்த கதையும் வட்டார வழக்கு மொழியில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு என்றாலும், கதை அந்த வட்டார மக்களுக்காக மட்டும் எழுதப்பட்டது அல்ல என்பதை எழுத்தாளர் உணர வேண்டும். சுமார் 100 பக்கங்கள் படித்த பிறகு தான் மொழியை சரளமாக படிக்க முடிகிறது. தமிழில் எழுதப்பட்டுள்ள கதைக்கு தமிழில் அகராதி கொடுத்து ( 93 சொற்களுக்கு அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது ) எழுதப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு வட்டார வழக்கு சொற்கள் பயன் படுத்தப்பட்டுள்ளது. அகராதியை பார்த்து பார்த்து கதை படிக்க வேண்டிய பொறுமை எல்லோருக்கும் இருக்காது. இன்னும் சிறிது காலத்தில் வட்டார வழக்கு மொழிகள் அழிந்து விடலாம். அந்த கால கட்டத்தில் இந்த புத்தகத்தை படித்தால் ஒரு வேற்று மொழி புத்தகத்தை படிப்பது போல இருக்கும்.

மொழி ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களுக்கு இந்த புத்தகம் உதவக்கூடும். மற்றப்படி சரளமான தற்காலிக தமிழ் மொழி நடை போதுமானது.

முழு கதையும் வட்டார வழக்கு சொற்களில் எழுதப்பட்டிருந்தாலும், வசை சொற்களை கொச்சையாக கதை முழுவதும் பயன் படுத்தியிருப்பது தவிர்த்திருக்க வேண்டும். “ கூதிஎன்ற சொல் சில முறை படிக்கும் போது எளிதாக கடந்து விடுகிறது ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது குமட்டல் ஏற்ப்படுகிறது.

மதமும் கடவுளும்ஆங்கிலேயரின் வருகையின் காரணமாக கத்தோலிக்க மதத்திற்க்கு மாற்றப்பட்ட பரதவர்கள், மேரியை தொழுதாலும் மாரியை வணங்குவதில் விருப்பம் உடையவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை குறிப்பிட்டதுடன், மத மாற்றத்தினால் மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை என்று குறிப்பிட்டுருப்பது நிகழ் காலத்துக்கும் பொருந்தும். மதம் மாற்றுபவர்களும், மதம் மாறுபவர்களும் இதை கருத்தில் கொண்டால் இன்று சமூகத்தில் ஏற்ப்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்கலாம்.

சுதந்திரப் போராட்டமும் அரசியலும் மிகவும் மேலெலுந்தவாரியாக சொல்லப்பட்டுள்ளது. காந்தி, நேரு, பட்டேல், வா..சி. காமராசர், அண்ணா, பெரியார், கலைஞர், எம்ஜிஆர், அம்மா காங்கிரஸ், நீதிகட்சி, திராவிட கட்சி என்று ஒற்றை வரிகளில் அந்த அந்த கால கட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது அரசியலை அதன் தாக்கங்களை கூட எழுதவில்லை. பரதவர் சமுதாயத்திலும் கொற்கையில் வந்து குடியேறிய நாடார் சமுகத்திலும் அரசியலில் ஈடுபட்ட சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோணியின் மாற்று வடிவமான கப்பலை விவரித்து, கப்பலோட்டிய தமிழனின் வரலாற்றை விரிவுபடுத்தி எழுதியிருந்தால் இந்த கதைக்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

தோணி தொழில் சார்ந்தும், வியாபாரம் சார்ந்தும் பரதவ மக்களும் நாடார் மக்களும் இலங்கையை சார்ந்து இருந்ததும், அங்கு சென்று குடியேறியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு எற்ப்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக பலர் திரும்பி வந்து கொற்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இன்றளவும் இருக்கும் தீவிரவாதம் என்று சொல்லப்படும் சுதந்திர போராட்டத்தை சிறிதும் விவரிக்காமல் விலகியிருப்பது, தற்போதைய தமிழக அரசியலில் சிக்கிகொள்ளாமல் இருக்க கவனமாக எடுத்துக்கொண்ட முயற்சி. இன்றைய மீனவர்கள் நிலையை குறித்து எழுதாமல் நழுவி விட்டீர்கள்

கப்பல் தொழிலும் கன்டெய்னர் தொழிலும் தொடங்கியதால், தோணி தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து, அதில் முன்னேறிய குடும்பங்களை பற்றி பின் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாறி வரும் சூழ்நிலையை உணரமால், தொழிலையையும் மாற்றாமல், கல்வியும் கற்காமல் கொற்கையிலேயே தங்களது வாழ்க்கையை அழித்து கொண்டவர்களை பற்றி குறிப்பிட்டிருப்பது இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்

பொருளுடனும் பெருமையுடனும் வாழ்ந்து இன்று கீழ்நிலையில் இருக்கும் மக்களை சந்தித்ததால் தான் நீங்கள் இந்த கதையை எழுதியுள்ளதாக முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.

குடும்பங்களை பற்றிய கதை அதிகம். 45 குடும்பங்களை 35 குடும்ப வரைப்படம் ( FAMILY TREE ) மூலம் விவரித்து 446 கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். இவர்களை தவிர வேறு பல கதாபாத்திரங்களும் உள்ளது. இந்த வரைப்படம் வாசகர்கள் புரிந்து கொள்ள கொடுக்கப்பட்டதா அல்லது நீங்கள் எழுதும் போது உங்களுக்கே குழப்பம் வராமல் இருப்பதற்க்காக தயாரிக்கப்பட்டதா என தெரியவில்லை எத்தனை கவனமாக படித்தாலும் யார் யாருடைய வாரிசு, யார் யாருக்கு சொந்தக்காரர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. உங்களுக்கு கூட இப்போது நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால், ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கதையாக இருப்பதால்,  தொடர்ச்சி வேண்டும் என்பது அவசியமில்லை.

கதையின் நடுவில் ஒரு 50 பக்கத்தை படிக்காமல் மேல் கொண்டு படித்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்ப்படாது.

குடும்ப உறுப்பினர்களின் ஆசா பாசங்கள், போட்டி பொறாமைகள், உறவுகளுக்குள் திருமணம் முடிப்பது, வெட்டி பந்தா என்று எல்லாவற்றையும் சொல்லியிருப்பது மற்றும் அவர்களது மூன்றாம் தலைமுறை வாரிசுகளுடன் கதையை முடித்திருப்பது படிக்கும் ஆவலை தூண்டுகிறது

இந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் இடையே திரைப்பட துறையை ஒரு சில வரிகளில் படங்களின் பெயர்கள் மூலமும் பாடல் வரிகளின் மூலமும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. நடிகர் சந்திரபாபுவின் பெயரை குறிப்பிடாமல் அவரது வாழ்க்கை சம்பவத்தை சில வரிகளில் சொல்லியிருப்பதன் மூலம் அவர் இந்த சமூகத்தை சார்ந்தவர் என்பதை குறிப்பிட்டுள்ளீர்கள். இன்றைய இளைய தலைமுறையும் அடுத்த தலைமுறையும் இதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

காமம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. உங்களுக்கு தெரிந்தா எல்லா காம வகைகளையும் ஒரே கதையில் சொல்லியிருப்பது, சற்று மிகையாக தெரிகிறது. முறை தவறிய உறவுகள் அம்மா -மகன்,.  அண்ணன்தங்கை, மற்ற உறவுகளுக்கிடெயேயன  தவறான உறவுகள், ஓரின சேர்க்கைகள் என எல்லாவற்றையும் தினித்திருப்பது மிகை.

மேலும், இதில் யாருடைய சோகத்தையும் மிகைப்படுத்தி எழுதி, கண்ணிர் பிழிய வைக்க முயற்சி செய்யாதது பாரட்டுக்குரியது. சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளுக்கு ஜாதியையோ, தொழிலதிபர்களையோ அரசையோ மற்ற சமூகத்தையோ குறை கூறாமல், அவர்களே காரணம் என்பதை உணர செய்திருப்பது நல்ல உத்தி.

பொதுவாக கதாநாயகன், நாயகி வில்லன் என்று கதை புனையப்படும். அதை தவிர்த்து மொத்த சமூக மக்களையும் கதாபாத்திரங்களாக மாற்றியிருப்பது வேறுப்பட்ட முயற்சி.

ஒரு நூற்றாண்டில் ஒரு நிலப்பரப்பில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுப்பது கடினம். ஏதேனும் ஒன்று அல்லது இரண்டை  வலியுறுத்தி கதையை நகர்த்தியிருந்தால், சிறப்பாக அமைந்திருக்கும்.

எல்லாம் இருக்கிறது ஆனால் எதுவுமே முழுமையாக இல்லையென்று தோன்றுகிறது.

இந்த கதையை எழுத நீங்கள் படித்த புத்தகங்களை குறிப்பிட்டு அவர்களை சிறப்பித்தமை நல்ல விசயம்.

அன்மை கால வரலாற்றை  ,  சாகத்திய அகதெமி விருது  பெறும் அளவுக்கு எழுதியிருப்பதற்க்கு மனதார பாரட்டுகிறேன்.

சரித்திரத்தை பதிவு செய்திருந்தாலும் , இடதுசாரி எழுத்தாளர், வலதுசாரி எழுத்தாளர், தலித் இலக்கியம் மற்றும் இன்ன பிற எழுத்து வகையை சார்ந்தது என்ற வட்டத்துக்குள் சிக்க முடியாதபடி கதை அமைந்துள்ளது.


விருது பெற்ற சமயத்தில் சம்பிரதாயமாக பலரும் வாழ்த்து சொல்லியிருந்தாலும் அவர்கள் யாரும் அதை படிக்கவில்லை என்பது புரிந்தது

மேலும் ஒரு அரசியல் கட்சி சார்ந்த உங்களது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உங்களது எழுத்தை உங்களை வலது சாரி என்பது போல காட்ட முயற்சித்தனர். இந்த சமயத்தில் உங்களது மனநிலை எப்படி இருந்தது என்பதை அறிய விரும்புகிறேன்.

இன்று வரை உங்களுடைய இந்த புத்தகத்துக்கு விமர்சன கூட்டம் பாராட்டு விழாக்களோ நடைப்பெறவில்லையென்று தோன்றுகிறது. மக்களிடையே, சம கால எழுத்தாளர்களிடையே மற்றும் விமர்சகர்களிடையே பரவலாக சென்றடயவில்லை என தோன்றுகிறது. இவ்வாறு சென்றடைய நீங்களும் எதுவும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. ஏன் ?

பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, குடும்பத்தையும் கவனித்து கொண்டு, நிறைய படித்து ஒரு வரலாற்றை பதிவு செய்திருப்பது பாரட்டுக்குரியது. இவை எப்படி சாத்தியமானது. எவ்வளவு காலம் இதற்காக உழைத்தீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்.

இந்த கதையில் வரும் கதாபத்திரங்களில் எத்தனை பேர் உண்மையில் வாழ்ந்தவர்கள். ?

இந்த கதாபாத்திரங்களின்  பெயர்களை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்.
நன்றியுடன்

எம். எஸ். சேகர்
================================================================================


On Wed, Sep 3, 2014 at 1:25 PM, mallisekar mallisekar <mallisekar@hotmail.com> wrote:
Dear Mr.Cruz,

My review about your book " koRkai " enclosed .  If you have time, pl. write back few words about my review.

Regards

M.S.SEKAR



Dear Mr.Sekar,

Good to read your reveiw about Korkai.

I am presently stationed in Delhi for some meetings.

Shall write back to you next week.

Thanks and Regards,

Joe 

Sir,

Thanks for prompt reply. I am living in Delhi. If you like if you have some time, can we meet at your convenient.

Regards,

M.S.SEKAR

Is it possible to meet tomorrow by 8.30am at ****************

Regards,

Joe
Sir,

I thinks its too early to meet at Janpath. If you have any spare time in the evening, that will suit me.


Regards

M.S.SEKAR
Sir,

If you are still in Delhi, pl. give some time for today or tomorrow.

Regards

M.S.SEKAR

















No comments:

Post a Comment