Saturday 11 January 2014

வைகுண்ட ஏகாதேசியும் - பரமபதமும்



வைகுண்ட ஏகாதேசி::
வைகுண்ட ஏகாதேசி என்றால் என்ன ? பலன்கள் என்ன ? அன்று என்ன செய்ய வேண்டும் என்று பல குறிப்புகள் இனையத்திலும், புத்தகங்களிலும் காணக்கிடைக்கிறது.
இன்றைய தினங்களில் இரவு நேரத்தில் கோவிலுக்கு போய் சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை பார்பது அல்லது பகல் நேரத்தில் கோவிலுக்கு செல்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.

எனது வாலிப வயதில், இது குறித்து அதிகமாக தெரியாது. ஒரு சிலர் இரவு கண்விழித்து கோவிலுக்கு செல்வார்கள். அல்லது பகலில் கோவிலுக்கு சென்று வருவார்கள்.
இரவு கண்விழிக்கும் பொருட்டு “பரமபதம்” என்ற விளையாட்டை விளையாடி கொண்டிருப்பார்கள். தாயம் உருட்டி காய்களை நகர்த்துவது. நமது காய் ஏணி இருக்கும் கட்டத்தில்  வந்தால், நமது காயை நேரடியாக அதன் உச்சி பகுதிக்கு கொண்டு செல்லலாம். பாம்பின் தலை இருக்கும் கட்டத்தில் வந்தால், பாம்பின் வால் இருக்கும் கீழ் பகுதிக்கு வந்து சேர்ந்து விடும். மொத்தம் 100 கட்டங்கள் இருக்கும். 100வது கட்டத்தை அடைவதே ஆட்டத்தின் வெற்றி. 100வது கட்டத்தை அடைய முயற்சி செய்யும் வேளையில் பலமுறை ஏணியில் ஏறுவது, பாம்பின் மூலம் கீழிறங்குவதும் நடைபெற்று கொண்டேயிருக்கும்.
சொக்கட்டான் ஆடுவதும் உண்டு. கற்களை மேலே தூக்கி போட்டு கிழே உள்ள கற்களை கையில் எடுத்து, மேலிருந்து விழும் கல்லை பிடிக்க வேண்டும்.
இந்த இரண்டு விளையாட்டையும், இரவு முழுவதும் விளையாடி கொண்டிருப்பார்கள்.

இளைஞர்களுக்கு இந்த விளையாட்டில் அதிக ஆரவம் இல்லையென்பதால், திரையரங்குகளில் இரவு காட்சியில் இரண்டு அல்லது முன்று படங்களை திரையிடுவார்கள். அதாவது இரவு 10 மணியிலிருந்து காலை நாலு மணிவரை அல்லது 5 மணி வரை படங்கள் தொடர்ந்து ஓடும். ஒரே டிக்கெட்டில் 2-3 படங்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்கலாம்.
சென்னை, விருகம்பாக்கம் நேஷ்னல் தியேட்டரிலும், சாலிகிராமம் ராஜேந்திரா தியேட்டரிலும் இப்படி படங்களை போடுவார்கள். ஒரு MGR படம் ஒரு சிவாஜி படம் மேலும் வேறு ஏதாவது படம் போடுவார்கள். மூன்று படங்களும் MGR படங்களாக இருந்தால், தியேட்டரில் கூட்டம் அலைமோதும்.
ஒரு முறை ராஜேந்திரா தியேட்டரில் போட்ட மூன்று படங்கள்.
1) மிஸியம்மா, 2) தூக்கு தூக்கி  3) பார்த்தால் பசி தீரும்.
மூன்றையும் ஒன்றாக சொல்லிபாருங்கள். ஆறுதலாக இருக்கும்.

இன்றைய கால கட்டங்களில் இப்படி பரமபதம் மற்றும் தொடர்ந்து படம் பார்க்கும் வாய்ப்பு உங்கள் யாருக்காவது கிடைக்கிறதா.

No comments:

Post a Comment