Monday 13 January 2014

ஆலய தரிசனம் - கோனர் கோவில்



04.01.2014 அன்று, ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள “கோனார்க்” கோவிலுக்கு சென்றிருந்தேன். சுற்றுலா பேருந்தில் , வழிகாட்டியுடன் சென்றிருந்தேன். இதற்க்காக சுற்றிபார்க்க ஒதுக்கப்பட்ட நேரம் 2 மணி நேரம். கோவிலை பற்றி 10 நிமிடம் குறிப்புகள் கொடுத்தார். கோவிலுக்கு உள்ளே சென்ற பின் வேறு ஒரு வழிகாட்டியிடம் ஓப்படைத்துவிட்டு அவர் ஒதுங்கிவிட்டார்.

புதிய வழிகாட்டி கோவிலின் சிறப்புகளையும், யார் கட்டியது என்பது பற்றியும், அதன் சிறப்பு தன்மைகளையும் பற்றியும் சுற்றி வந்து கூறிக்கொண்டிருந்தார். முதலில் எல்லோரும் கவனமாக கேட்டுகொண்டிருந்தாலும், படிப்படியாக கவனம் சிதற ஆரம்பித்தது. 

கோவில் சுமார் 800 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடம் இடிந்துவிட கூடாது என்பதற்க்காக, கோவிலின் உள்ளே மணல் நிரப்பி, கோவிலின் மேற்கூரையை தக்க வைத்துள்ளார்கள். இதில் இருந்த பல தூண்பகுதிகளை, பூரி ஜெகநாத் கோவில் கட்டும் போது எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது சூரிய தேவனுக்காக கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவத்தில் மூல கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே, குதிரைகள் இழுக்கும் தேரில் சூரிய பகவான் அமர்ந்த நிலையில் இருந்த சிலை இருந்ததாகவும் அதற்கு பூஜைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இப்போது அப்படி ஏதுவும் சிலை இல்லை. பூஜைகளும் இல்லை. இது ஒரு சுற்றுலா தளம் மட்டுமே. மேலும், விவரங்களுக்கு இனையதளத்தில் பார்க்கவும். பல்வேறு விதமான குறிப்புகள் கிடைக்கிறது.

இதை சூரியன் கோவில் என்பதை விட காமன் தேவன் கோவில் என்று கூறலாம். கோவிலின் முழு கட்டிட பகுதிகளிலும் காமம் வழிந்தோடுகிறது. காம நிலையை சித்தரிக்கும் படங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. காமம் அனுபவிக்க எத்தனை நிலைகள். அதை இவ்வளது துல்லியமாக சிலைகளாக வடித்த சிற்பிகளின் கலைத்திறனை எப்படி பாரட்டுவது என்று தெரியவில்லை. அனுபவித்து சிலை வடித்திருப்பார்களோ அல்லது யாரையாவது அந்த நிலைகளில் காமம் அனுபவிக்க சொல்லி அதை பார்த்து சிலை வடித்திருப்பார்களோ. எத்தனை நுணுக்கம். 

அனைத்து விதமான காம நிலைகளை சித்தரிக்கும் சிற்பங்களும் இருந்தது, ஆண்-பெண் , ஆண்-ஆண் , பெண்-பெண், மற்றும் விலங்குகள் (என் கண்ணில் படவில்லை) இவர்களின் சிலைகள் மிக அற்புதமாக படைக்கப்பட்டிருந்தது. சில நிலைகளை  இரண்டு பேரால் செய்ய இயலாது. முன்றாம் நபரின் துனை தேவைப்படும்.

எல்லோருக்கும் உன்னிப்பாக ரசித்து பார்க்கவேண்டும் என்ற மனநிலையிருந்தாலும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேகமாக பார்த்துகொண்டே நகர வேண்டியிருந்த்து. அதிலும் பொது இடத்தில் பலர் முன்னிலையில் பார்பதில் நிறைய சங்கடங்கள் இருந்தது

இன்றைக்கு இனையங்களில், நீலப்படம் நிறைய பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. அறிவியல் துணை கொண்டு பலவிதமாக நாம் முன்னே காட்சிகள் நிறுத்தப்படுகிறது.  ஆனால், இங்கே கற்பனையில் மட்டுமே சிற்பி சிலை வடித்துள்ளான் என்றால் அவனது காதல் திறமையும், காமத்தின் அனுபவ திறமையும் மிகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய கால நிலையில், இது போன்று ஒரு சிற்ப கட்டிடத்தை கட்ட முடியுமா ?. கட்ட நினைத்தாலும், கலாச்சார பாதுகாவலர்கள் என்ற பெயரில் எத்தனை எதிப்புகள் வெளிப்படும். ஏன் ஒரு கண்காட்சியை கூட நடத்தமுடியாது. ஆனால், அன்றைய காலகட்டத்தில், கோவில் என்ற இடத்தில், முழுக்க முழக்க காமத்தை சொல்லி கொடுக்கும் இடமாக இது இருப்பது, அன்றைய ஆளும் வர்கத்தின் அசாத்திய மனநிலையையும், அதை மக்கள் ஏற்றுக்கொண்ட விதத்தையும் பறைசாற்றுகிறது.

வாய்ப்பு கிடைத்தால், மீண்டும் ஒருமுறை சென்று நிதானமாக பார்க்கவேண்டும்.

வடஇந்திய கோவில்களில் மட்டுமே இது போன்ற சிற்பங்கள் அதிகம் காணப்படுகிறது என நினைக்கிறேன். தென்னிந்திய கோவில்களில் இது போன்ற சிற்பங்கள் உண்டா என்று தெரியவில்லை.

என்னுடன் வந்த நண்பர் கட்டிடத்தின் உயரே இருந்த சிலையை பார்த்து விட்டு திரும்பும் போது, அதே சிலையை பார்த்து விட்டு ஒரு இளம் பெண்ணும் தலையை திருப்ப , இருவரது பார்வையும் கண நேரம் மோதிக்கொள்ள, அந்த பெண் வெட்கம் கலந்த புண்ணகையை வீசிவிட்டு விலகியிருக்கிறாள். அதை நினைத்து நினைத்து என்னிடம் சொல்லி வெட்கப்பட்டு பூரித்துபோனார்.

நண்பனின் நாணமும் நன்றாய்தான் இருந்தது.




No comments:

Post a Comment