Friday 10 January 2014

ஆலய தரிசனம்






ஒரிசா - பூரி - ஜெகநாத் கோவில்



03.01.2014 அன்று ஒரிசா மாநிலத்தில் , பூரி மாவட்டத்தில் உள்ள ஜெகநாத் சுவாமி கோவிலுக்கு சென்ற அனுபவங்கள்.

சிறிய நகரம். போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆடம்பரமான வாழ்க்கை கண்ணில்படவில்லை.

பூரி ஜெகநாத் கோவில் தேர் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. தொலைகாட்சிகளில் இந்த தேர் திருவிழாவை பார்த்திருக்கிறேன். எனவே, நேரில் கோவிலை சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

எல்லா ஊர்களை போன்றே கோவிலின் சுற்றுபுறம் அமைந்திருந்தது. தேர் ஓடும் வீதி மிகவும் அகலமாக இருந்தது. கடைவீதி, நடைபாதை கடைகள் வளர்ந்து வீதியில் கடைகள் விரிக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் செல்ல வழி கிடைக்கவில்லை. மக்கள் இடித்து கொண்டு தான் நடக்க வேண்டியிருந்தது. மக்கள் அமைதியாக பேசும் பழக்கம் கொண்டிருந்தனர். இரைச்சல் குறைவாக இருந்தது.

கோவிலின் முன்புறம் , கடவுளின் ஏஜென்டுகள் சிறப்பு தரிசனத்திற்க்கு அழைத்து கொண்டிருந்தனர். கூட்டம் நிறையவே இருந்தது.

நாங்கள் சென்ற காலை 11.00 மணி சமயத்தில், தரிசனம் மூடப்பட்டிருந்தது. கடவுள் சாப்பிட்டு கொண்டிருப்பதாக கோவில் ஊழியர்களால் சொல்லப்பட்டது. கடவுள் தினமும் 5 வேளை சாப்பிடுவதாக தெரிகிறது. கோவிலுக்கு வெளியே அவரால் படைக்கப்பட்டவர்கள் 2 வேளை சாப்பிட வழியில்லாமல், பிச்சையெடுப்பதை பார்க்க முடிந்தது.

தரிசனத்திற்க்காக வரிசையில் நின்றோம். சிறிது நேரம் கழித்து, இது டிக்கெட் வாங்கி சிறப்பு தரிசனம் செய்யும் வரிசை என்றும், தர்ம தரிசனம் செய்ய வேறு வாசல் வழியாக செல்ல வேண்டும் என்று கூறியதால், வரிசையிலிருந்து விலகி தர்ம தரிசனம் செய்யும் வாயில் வழியாக உள்ளே சென்றோம். இதற்கிடையில் கடவுள் சாப்பிட்டு முடித்துவிட்டு தரிசனம் கொடுத்துகொண்டிருந்தார்.

நாங்கள் நுழைந்த வாயில் வழியாக கடவுள் சிலை இருக்கும் இடத்தை அடைந்தோம். இடது புறம் ஒரு சிலை இருந்தது. பித்தளை, செம்பு அல்லது ஐம்பொன் சிலையாக இருக்கலாம். முகம் மட்டும் தெரிந்தது. உடல் பகுதிகள் பூக்களால் மூடப்பட்டிருந்தது. அது தான் மூலவர் சிலை என நினைத்தேன். ஆனால், நாங்கள் நுழைந்த பகுதியின் நேர் எதிரே வேறு சிலை அல்லது படம் இருந்தது என நினைக்கிறேன். அதை பார்த்து மக்கள் கோசம் எழுப்பி கும்பிட்டுகொண்டிருந்தார்கள். எது மூல விக்கிரம் என எனக்கு தெரியவில்லை. அந்த மூல விக்கிரகத்தை அடைத்து கொண்டு, புரோகிதர்கள் பணம் வசூலித்து கொண்டிருந்தார்கள். சற்று உள்ளே செல்ல ரூ.50/- கேட்டார்கள். வழக்கம் போல நான் கொடுக்கவில்லை. முற்றிலுமாக தர்ம தரிசனம்.

வழக்கம் போல கையெடுத்து சாமி கும்பிடவில்லை. எந்த கோரிக்கை விண்ணப்பமும் போடவில்லை. வழக்கம் போல வேடிக்கை பார்த்தேன். மற்றவர்களையும் கவனித்தேன். சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் சற்று அருகாமையில் போக அனுமதித்து கொண்டிருந்தார்கள். கடைசி வரை எது மூல விக்கிரம் என தெரியவில்லை.

அர்சனை கிடையாது, தீபாரதனை கிடையாது. மந்திரம் சொல்லவில்லை. பாடல்கள் பாடவில்லை. விபூதி, குங்குமம் போன்ற எந்த பிரசாதமும் கொடுக்கவில்லை. அங்கு கேட்ட ஒரே மந்திரம் காசு கொடு என்பது மட்டும் தான்.

தர்ம தரிசனம் முடித்தவுடன் , பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்தோம். அப்போது, சுற்றிலும் இருந்த வேறு பல மண்டபங்களில் இருந்த கடவுள்களையும் பார்த்தோம். கடவுள்களின் பெயர்கள் தெரியவில்லை. எல்லா கடவுள்களின் முகம் மட்டும் தான் தெரிந்த்து. உடல் பகுதியை திரை போட்டு மறைத்திருந்தார்கள். எங்கும் ஆராதனை கிடையாது. அவ்வப்போது பலர் அணுகி சிறப்பு தரிசனம் செய்ய அழைத்தார்கள். ஒரு இடத்தில் சாப்பிட/பிரசாதம் வாங்க அழைத்தார்கள்.

கோவில் கோபுரம் முழுக்க சிலைகள். அற்புதமான சிலைகள். காமத்தை அனுபவிக்கும் பலநிலைகளில் அணும் பெண்ணும் இனைந்த சிலைகள். சிலைகளை பார்க்கும் போது, பக்தி வெள்ளம் பெருகவில்லை. காம வெள்ளம் பொங்கியது. எல்லா மக்களுக்கும் அவைகளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், பொது இடத்தில் பலர் முன்னிலையில் பார்க்க கூச்சப்பட்டு கொண்டு, பார்த்தும் பார்க்காதது போல பார்த்துகொண்டு நகர வேண்டியிருந்தது.

அங்கிருந்த குரங்குகள் கொடுத்து வைத்தவை. சிலைகளுடன் ஒட்டி உறவாடிகொண்டிருந்தது. குரங்கு மணம் படைத்தவர்கள் ஏக்கத்துடன் பார்த்துகொண்டிருந்தனர்.

கோவிலை பற்றிய தல புராணம் அறியகூடிய சிலைகலோ சிற்பங்களோ இல்லை. அது போன்ற புத்தகங்கள் கூட கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பார்க்க கிடைக்கவில்லை.

கோவிலுக்கு சென்று வந்த பின்பு , இனையத்தில் கோவிலின் தலபுராணம் அறிந்தேன். இது ஒரு வைஷ்னவ கோவில்.1174 வருடம் புணரமைக்கப்பட்ட கோவில் என்று தெரிகிறது. மரத்தால் செய்யப்பட்ட சிலை என்றும் , சிலைக்கு கைகள் இல்லையென்றும் தெரிகிறது.

இருப்பினும் மக்கள் பக்தி பரவசத்துடன் கும்பிட்டு கோரிக்கை விண்ணப்பங்களை அனுப்பிகொண்டிருந்தனர்.

கோவிலை வலம்வரும் போது, ஒருவருக்கு மாலை போட்டு , தலையில் எதையோ சுமக்க வைத்து, புரோகிதர்கள் சூழ அழைத்து சென்றுகொண்டிருந்தனர். ஏதெனும் சிறப்பு பூஜையாக இருக்கலாம். வேண்டுதலாக கூட இருக்கலாம்.

எனக்கு வழக்கம் போல , பலி கொடுக்க அழைத்து போகும் ஆடு போல தோன்றினார். என் புத்தி மாறாது என்று எனக்கே தோன்றியது. அது எனது குற்றம் அல்ல. என்னை படைத்த, அப்படி சிந்திக்க வைத்த ஆண்டவனின் குற்றம்.

தமிழ்நாட்டு கோவில்களை பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு, இந்த கோவில்களில் இருக்கும் நடைமுறைகளை பார்க்கும் போது, பக்தி ஏற்பட வாய்பில்லை என்றே தோன்றுகிறது. ஒரு சுற்றுலா தளம் போல இருக்கிறது.
 













































































































































































No comments:

Post a Comment