Saturday 11 January 2014

ஆலய தரிசனம் - லிங்கராஜ் கோயில் - புவனேஸ்வர்

லிங்கராஜ் கோயில் - புவனேஸ்வர் ::



04.01.2014 அன்று ஒரிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் நகரத்தில் உள்ள லிங்கராஜ் (LINGARAJA TEMPLE) கோவிலுக்கு சென்றேன். எனது பயணம் திட்டமிடாத பயணம் என்பதால் , இந்த கோயில் குறித்த எந்த தகவலும் என்னிடம் இல்லை. வழிகாட்டி கூறிய சில விவரங்களுடன், கோயிலுக்குள் நுழைந்தோம்.
கோயில் கட்டிட கலை மிகவும் அழகாக இருந்தது. வாசலில் காவல் அதிகமாக இருந்தாலும் சோதனை என்ற பெயரில் வேதனை ஏற்படுத்தவில்லை. கோயில் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. இது விஷ்ணு கோயில் என்றும் சிவன் கோயில் என்றும் கூறப்பட்டாலும், சிவன் கோயிலாகவே காட்சியளித்தது.
மூலவர் இருக்கும் இடம் தவிர்த்து, அதை சுற்றியுள்ள இடங்களில் மேலும் 52 மண்டபங்கள் (துளசி மாடம் போன்று சிறிதும் பெரிதுமாக) இருந்தது. இவை தரை மட்டத்திலேயே இருந்தது. அனைத்திலும் லிங்க வடிவங்களும், பாம்பு வடிவங்களும் இருந்தது. எந்த இடத்திலும் பூஜை இல்லை. எங்கும் பிரசாதம் என்று எதுவும் கொடுக்கப்படவில்லை. புரோகிதர்கள் யாரும் தொந்தரவு செய்யவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு மண்டபத்தின் கீழ் துணி விரிக்கப்பட்டிருந்தது. அதில் மக்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். மற்றப்படி கோயில் அமைதியாக இருந்தது மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது.
எனக்கு பாம்பு என்றால் பயம். பாம்பை தொலைகாட்சியில் கூட பார்க்கமாட்டேன். படம் கூட பார்க்கமாட்டேன். இங்கு எல்லா மடாத்திலும் பாம்பு உருவம் இருந்தது. இதன் காரணமாக என்னையறியாமல் கையெடுத்து கும்பிட்டேன். எந்த வேண்டுதலும் இல்லை. இது ஒரு அனிச்சைசெயலாக அமைந்தது . பயம் தான் காரணம்
காமலீலையை சித்தரிக்கும் சிலைகளும் இருந்தது.

http://www.youtube.com/watch?v=5tD9823FjZw


No comments:

Post a Comment