Friday 10 January 2014

ஆலய தரிசனம்

கொல்கத்தா காளி கோவில்::


30.12.2013 அன்று கொல்கத்தாவில் இருந்தேன். மிகவும் புகழ்பெற்ற காளிபாரி(Kalibari) காளி கோவிலுக்கு செல்லலாம் என்று நண்பருடன் பேருந்தில் சென்றேன்.
பேருந்திலிருந்து இறங்கி, ஒரு சிறிய பாலத்தை கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. பாலத்தின் ஒரு பக்கத்தில் விலைமாதுக்கள் நின்றிருந்தார்கள். மிகவும் கண்ணியமாக ஆடை ஆணிந்திருந்தார்கள். அதிகமான ஒப்பனை கிடையாது. அவர்கள் யாரையும் சைகை செய்தோ, சிரித்தோ, சத்தம் செய்தோ யாரையும் அழைக்கவில்லை. அவர்களிடம் அழைத்து செல்ல எந்த புரோக்கரும் யாரையும் அணுகவில்லை. நண்பர் சொல்லவில்லை என்றால், அவர்கள் விலைமாதுக்கள் என்று அறிந்திருக்கமாட்டேன்.

காளி கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். கோவில் வாசலில், சாதுக்கள், சாமியார்கள், புரோகிதர்கள் போன்று காணப்பட்ட மக்கள் சிலர் பிச்சை எடுத்துகொண்டும், பலர் சீட்டாடி கொண்டும் இருந்தனர். இவர்கள் வெள்ளை வேட்டி பஞ்சகச்சம் கட்டியிருந்தனர். காவி வேட்டி கட்டியிருந்தனர். இவர்கள் அனைவரது நெற்றியிலும் நாமம் பெரிதாக தீட்டியிருந்தனர். கூச்சல் குழப்பத்துடன் சீட்டாடி கொண்டிருந்தனர்.
சிலர் எங்களை அணுகி , அவர்களது கடையில் பிரசாதம் வாங்கிகொண்டு, செருப்பை அங்கே விட்டுவிட்டு போகும்படி கேட்டுக்கொண்டனர். யாரும் வற்புறுத்தவில்லை. நாங்கள் பிரசாதம் வாங்கமலேயே ஒரு கடை வாசலில் செருப்பை விட்டுவிட்டு, கோவிலுக்குள் சென்றோம்.
கோவிலுக்குள் நுழைந்தவுடன், புரோகிதர்கள், விசேச தரிசனம் செய்விப்பதாகவும், பூசை செய்து தருவதாகவும் கூறி எங்களை அனுகினர். அவர்கள் அணைவரையும் விட்டு விலகி, வரிசையில் நின்று தரிசனத்திற்க்கு காத்திருந்தோம்.
பெரும்பாலான பெண்கள், அர்சனை தட்டு வைத்திருந்தனர் . அதில், செம்பருத்தி பூ, முள்ளங்கி , ஊதுபத்தி மற்றும் சில பொருட்கள் இருந்தன. எங்களுக்கு முன்பு நின்றிருந்த பெண்மணி, பெங்காளி மொழியில் தொடர்ந்து ஏதொ பாடிகொண்டிருந்தார். ஏதுவும் புரியவில்லை. அவர் யாரை பற்றியும் கவலைபடாமல் பாடிகொண்டிருந்தார். நாங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த அரை மணி நேரமும் பாடிக்கொண்டிருந்தார்.
ஒரு வழியாக காளி சிலை இருக்கும் அறைக்குள் நுழைந்தோம். பெரிய ஏமாற்றம். அறை சற்று பள்ளமாக இருந்தது. அறையில் புணரமைப்பு வேலைகள் நடைபெற்றுகொண்டிருப்பதற்க்கான அறிகுறிகள் இருந்தது . அதிக பட்சம் 15 x 20 அடி அறை. அறைக்குள் இடப்புறமாக சென்று , சிலையை சுற்றி , சிலைக்கு நேராக வந்து கும்பிட்டுவிட்டு வந்த வழியாகவே வெளியே வரும்படி அமைந்திருந்த்து. அங்கிருந்த சிலை கீழே







நான் பார்த்த காளி சிலை
நான் எதிர்பார்த்து சென்ற காளி சிலை வேறு. பல கைகளுடன், சிவப்பு நிறத்தில் நாக்கு வாயிலிருந்து வெளியே தொங்கும் வகையிலும் கையில் மனித தலையுடன், காலில் சிங்கம் உருவம் , அசுரனை வாதம் செய்யும் உருவத்தை கற்பனை செய்து கொண்டு போனேன். பெரிய ஏமாற்றம்.



நான் எதிர்பார்த்து சென்ற காளி சிலை
சிலைக்கு முன்பு 3 புரோகிதர்கள். யாரும் அர்ச்சனை செய்யவில்லை. தீபாரதனை இல்லை. விபூதி, குங்குமம், சந்தனம் மற்றும் வேறு எந்த பிரசாதமும் தரப்படவில்லை. அவர்கள் எந்த மந்திரமும் சொல்லவில்லை. எந்த பாடலும் பாடவில்லை.
ஆனால், சிலைக்கு முன்பு வந்தவுடன் காசு கொடு என்று நச்சரிக்க தொடங்கிவிட்டார்கள். கொடுக்காமல் முன்னால் செல்லவும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து கேட்டுகொண்டேயிருந்தார்கள். அல்லது எதிரே இருக்கும் உண்டியலிலாவது, காசு போடும்படி கேட்டுகொண்டார்கள். அவர்கள் மூவரும், பேருந்தில் நடத்துனர், விரலிடுக்கில் ரூபாய் நோட்டுக்களை வைத்திருபது போல வைத்திருந்தனர். நிறுத்தி வழிப்பறி செய்யும் இடம் போலவே இருந்தது. வேறு எதோ சொன்னார்கள். புரியவில்லை. இதையும் மீறி நான் ஒன்றும் கொடுக்காமல், வெளியேறினேன். இவர்கள் அடித்த வழிப்பறி கொள்ளை சம்பவத்தால், காளி சிலையை கூட ஒழுங்காக பார்க்க முடியவில்லை
சில அடிகள் நடந்தவுடன், மீண்டும் ஒரு வழிபறிகாரர். அவர் ஏன காசு கேட்கிறார் என புரியவில்லை. மீண்டும் சில அடிகள் நடந்தவுடன், காவல்காரர் எந்தவித கூச்சமும் இல்லாமல் அவரும் காசு கேட்கிறார். யாருக்கும் காசு கொடுக்காமல் வெளியே வந்தேன். பெரிய கொள்ளை கூட்டத்திடமிருந்து தப்பித்து வந்த உணர்வு.
ஆனால், மக்கள் அங்கு தாரளமாக காசு கொடுத்து கொண்டிருந்தனர். சிறப்பு தரிசனம் என்று அழைத்துவரப்பட்டவர்கள், எங்களை விட சற்று தூரத்திலிருந்து தரிசனம் செய்து கொண்டிருந்தனர். ஆனால், சற்று நிதானமாக நின்று தரிசனம் செய்ய அனுமதித்து, அவர்களிடம் கொள்ளை அடித்துகொண்டிருந்தனர்.
வெளியே வந்தால், அந்த புரோகிதர் கூட்டம் சண்டையிட்டுகொண்டு சீட்டாடி கொண்டிருந்தனர்.  உள்ளே கொள்ளையடித்து வெளியே கும்மாளமடித்து கொண்டிருந்தனர்.
ஒருவழியாக செருப்புகளை அணிந்து கொண்டு வெளியே வந்தோம். தேநீர் சாப்பிடும் போது, உடலை விற்று, காசு கொடுப்பவனுக்கு சுகம் கொடுத்து பணம் சம்பாதிக்கும் விலைமாதுக்களுடன் இந்த புரோகிதர்களை ஒப்பிட தோன்றியது. அவர்களை விட இவர்கள் கீழானவர்களாக தெரிந்தார்கள். இவர்கள் சாமிக்கு ஆள்பிடித்து காசு சம்பாதிப்பதை விட அந்த விலை மாதுக்களுக்கு ஆள் பிடித்து கொடுத்து காசு சம்பாதிக்கலாம். அல்லது அவர்களுடன் இவர்களும் நின்று கொண்டு தொழில் செய்யலாம். ஆண்களிடம் காம சுகம் காணும் கூட்டம் அதிகரித்து வருவதால், இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. பொதுவாக கோவில்களுக்கு செல்வதில்லை. குடும்பத்தாரை அழைத்து செல்வேன். கையெடுத்து சாமி கும்பிடுவதில்லை. எந்த கோரிக்கையும் வைப்பதில்லை. அனைத்து உயிரினங்களும் அவரால் படைக்கப்பட்டதென்றால், நான் விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை. யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் தானாகவே செய்வார்.
கோவிலுக்கு சென்றால் இது போன்ற நிகழ்சிகளை காண நேருகையில் மண உளைச்சால் தான் ஏற்படுகிறது. அதன் விளைவாக எழுதப்பட்டதுதான் இந்த பதிவு.
எந்த சமூக மக்களையும் விமர்சிப்பதோ, மனவருத்தம் ஏற்பட செய்வதோ நோக்கம் அல்ல.





ஒரிசா - பூரி - ஜெகநாத் கோவில்



03.01.2014 அன்று ஒரிசா மாநிலத்தில் , பூரி மாவட்டத்தில் உள்ள ஜெகநாத் சுவாமி கோவிலுக்கு சென்ற அனுபவங்கள்.

சிறிய நகரம். போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆடம்பரமான வாழ்க்கை கண்ணில்படவில்லை.

பூரி ஜெகநாத் கோவில் தேர் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. தொலைகாட்சிகளில் இந்த தேர் திருவிழாவை பார்த்திருக்கிறேன். எனவே, நேரில் கோவிலை சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது.
எல்லா ஊர்களை போன்றே கோவிலின் சுற்றுபுறம் அமைந்திருந்தது. தேர் ஓடும் வீதி மிகவும் அகலமாக இருந்தது. கடைவீதி, நடைபாதை கடைகள் வளர்ந்து வீதியில் கடைகள் விரிக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் செல்ல வழி கிடைக்கவில்லை. மக்கள் இடித்து கொண்டு தான் நடக்க வேண்டியிருந்தது. மக்கள் அமைதியாக பேசும் பழக்கம் கொண்டிருந்தனர். இரைச்சல் குறைவாக இருந்தது.
கோவிலின் முன்புறம் , கடவுளின் ஏஜென்டுகள் சிறப்பு தரிசனத்திற்க்கு அழைத்து கொண்டிருந்தனர். கூட்டம் நிறையவே இருந்தது.
நாங்கள் சென்ற காலை 11.00 மணி சமயத்தில், தரிசனம் மூடப்பட்டிருந்தது. கடவுள் சாப்பிட்டு கொண்டிருப்பதாக கோவில் ஊழியர்களால் சொல்லப்பட்டது. கடவுள் தினமும் 5 வேளை சாப்பிடுவதாக தெரிகிறது. கோவிலுக்கு வெளியே அவரால் படைக்கப்பட்டவர்கள் 2 வேளை சாப்பிட வழியில்லாமல், பிச்சையெடுப்பதை பார்க்க முடிந்தது.
தரிசனத்திற்க்காக வரிசையில் நின்றோம். சிறிது நேரம் கழித்து, இது டிக்கெட் வாங்கி சிறப்பு தரிசனம் செய்யும் வரிசை என்றும், தர்ம தரிசனம் செய்ய வேறு வாசல் வழியாக செல்ல வேண்டும் என்று கூறியதால், வரிசையிலிருந்து விலகி தர்ம தரிசனம் செய்யும் வாயில் வழியாக உள்ளே சென்றோம். இதற்கிடையில் கடவுள் சாப்பிட்டு முடித்துவிட்டு தரிசனம் கொடுத்துகொண்டிருந்தார்.
நாங்கள் நுழைந்த வாயில் வழியாக கடவுள் சிலை இருக்கும் இடத்தை அடைந்தோம். இடது புறம் ஒரு சிலை இருந்தது. பித்தளை, செம்பு அல்லது ஐம்பொன் சிலையாக இருக்கலாம். முகம் மட்டும் தெரிந்தது. உடல் பகுதிகள் பூக்களால் மூடப்பட்டிருந்தது. அது தான் மூலவர் சிலை என நினைத்தேன். ஆனால், நாங்கள் நுழைந்த பகுதியின் நேர் எதிரே வேறு சிலை அல்லது படம் இருந்தது என நினைக்கிறேன். அதை பார்த்து மக்கள் கோசம் எழுப்பி கும்பிட்டுகொண்டிருந்தார்கள். எது மூல விக்கிரம் என எனக்கு தெரியவில்லை. அந்த மூல விக்கிரகத்தை அடைத்து கொண்டு, புரோகிதர்கள் பணம் வசூலித்து கொண்டிருந்தார்கள். சற்று உள்ளே செல்ல ரூ.50/- கேட்டார்கள். வழக்கம் போல நான் கொடுக்கவில்லை. முற்றிலுமாக தர்ம தரிசனம்.
வழக்கம் போல கையெடுத்து சாமி கும்பிடவில்லை. எந்த கோரிக்கை விண்ணப்பமும் போடவில்லை. வழக்கம் போல வேடிக்கை பார்த்தேன். மற்றவர்களையும் கவனித்தேன். சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் சற்று அருகாமையில் போக அனுமதித்து கொண்டிருந்தார்கள். கடைசி வரை எது மூல விக்கிரம் என தெரியவில்லை.
அர்சனை கிடையாது, தீபாரதனை கிடையாது. மந்திரம் சொல்லவில்லை. பாடல்கள் பாடவில்லை. விபூதி, குங்குமம் போன்ற எந்த பிரசாதமும் கொடுக்கவில்லை. அங்கு கேட்ட ஒரே மந்திரம் காசு கொடு என்பது மட்டும் தான்.
தர்ம தரிசனம் முடித்தவுடன் , பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்தோம். அப்போது, சுற்றிலும் இருந்த வேறு பல மண்டபங்களில் இருந்த கடவுள்களையும் பார்த்தோம். கடவுள்களின் பெயர்கள் தெரியவில்லை. எல்லா கடவுள்களின் முகம் மட்டும் தான் தெரிந்த்து. உடல் பகுதியை திரை போட்டு மறைத்திருந்தார்கள். எங்கும் ஆராதனை கிடையாது. அவ்வப்போது பலர் அணுகி சிறப்பு தரிசனம் செய்ய அழைத்தார்கள். ஒரு இடத்தில் சாப்பிட/பிரசாதம் வாங்க அழைத்தார்கள்.
கோவில் கோபுரம் முழுக்க சிலைகள். அற்புதமான சிலைகள். காமத்தை அனுபவிக்கும் பலநிலைகளில் அணும் பெண்ணும் இனைந்த சிலைகள். சிலைகளை பார்க்கும் போது, பக்தி வெள்ளம் பெருகவில்லை. காம வெள்ளம் பொங்கியது. எல்லா மக்களுக்கும் அவைகளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், பொது இடத்தில் பலர் முன்னிலையில் பார்க்க கூச்சப்பட்டு கொண்டு, பார்த்தும் பார்க்காதது போல பார்த்துகொண்டு நகர வேண்டியிருந்தது.
அங்கிருந்த குரங்குகள் கொடுத்து வைத்தவை. சிலைகளுடன் ஒட்டி உறவாடிகொண்டிருந்தது. குரங்கு மணம் படைத்தவர்கள் ஏக்கத்துடன் பார்த்துகொண்டிருந்தனர்.
கோவிலை பற்றிய தல புராணம் அறியகூடிய சிலைகலோ சிற்பங்களோ இல்லை. அது போன்ற புத்தகங்கள் கூட கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பார்க்க கிடைக்கவில்லை.
கோவிலுக்கு சென்று வந்த பின்பு , இனையத்தில் கோவிலின் தலபுராணம் அறிந்தேன். இது ஒரு வைஷ்னவ கோவில்.1174 வருடம் புணரமைக்கப்பட்ட கோவில் என்று தெரிகிறது. மரத்தால் செய்யப்பட்ட சிலை என்றும் , சிலைக்கு கைகள் இல்லையென்றும் தெரிகிறது.
இருப்பினும் மக்கள் பக்தி பரவசத்துடன் கும்பிட்டு கோரிக்கை விண்ணப்பங்களை அனுப்பிகொண்டிருந்தனர்.
கோவிலை வலம்வரும் போது, ஒருவருக்கு மாலை போட்டு , தலையில் எதையோ சுமக்க வைத்து, புரோகிதர்கள் சூழ அழைத்து சென்றுகொண்டிருந்தனர். ஏதெனும் சிறப்பு பூஜையாக இருக்கலாம். வேண்டுதலாக கூட இருக்கலாம்.
எனக்கு வழக்கம் போல , பலி கொடுக்க அழைத்து போகும் ஆடு போல தோன்றினார். என் புத்தி மாறாது என்று எனக்கே தோன்றியது. அது எனது குற்றம் அல்ல. என்னை படைத்த, அப்படி சிந்திக்க வைத்த ஆண்டவனின் குற்றம்.
தமிழ்நாட்டு கோவில்களை பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு, இந்த கோவில்களில் இருக்கும் நடைமுறைகளை பார்க்கும் போது, பக்தி ஏற்பட வாய்பில்லை என்றே தோன்றுகிறது. ஒரு சுற்றுலா தளம் போல இருக்கிறது.
 














































































































































































No comments:

Post a Comment