Tuesday 24 June 2014

ஆண்மை எழுச்சி பெறாது



இன்று ( 24.06.2014 ) காலை பேருந்தில் ஏறி , மணி பர்ஸ்லிருந்து சில்லறை ரூ.5 எடுத்து பயணசீட்டு வாங்கினேன். இதற்கு 5 நிமிடம் ஆகியிருக்கும். திரும்பும் போது இது யாருடைய மணிபர்ஸ் என்று என் பக்கத்தில் நின்றிருந்த இளைஞன் கேட்டான். என்னுடையது என்று கூறினேன். என்னுடையது தானா என்று உறுதியாக கேட்டுவிட்டு கொடுத்துவிட்டான். 10 நிமிட பயணத்திற்க்கு பின்பு நோய்டா பகுதியிலிருந்து  2 மெட்ரோ ரயிலில் பயணித்து புதுதில்லி ரயில்வே நிலையம் வந்து அடைந்தேன். 

பின்பு 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டியிருந்ததால், மிதிவண்டியில் போகலாம் என்று எண்ணி, அதற்கு முன்பு சில்லறை இருக்கிறதா என பார்ப்பதற்க்கு மணி பர்ஸை திறந்து பார்த்தால் காலியாக இருந்தது. நான் வீட்டில் இருந்து புறப்படும் போது ரூ. 280/- சரியாக எண்ணி வைத்து தான் புறப்பட்டேன். அது காணவில்லை. 

பேருந்தில் அவண் மணிபர்ஸ்சை தரும் போது, சில்லறை எடுத்து விட்டு மீண்டும் கால்சட்டையில் வைக்கும் போது தவறி கீழே விருந்திருக்கும் , அதை இவண் பொறுப்புடன் எடுத்து தருகிறானே என மகிழ்ந்தேன். இப்போது புரிந்தது அது தவறி விழவில்லை என்பதும் அவண் மணிபர்ஸ்சை எடுத்து அதிலிருந்து பணத்தை எடுத்துவிட்டு காலி பர்ஸை கொடுத்திருக்கிறான் என்பது.

பின்பு இரண்டு கி.மீ. நடந்து நான் செல்ல வேண்டிய வருமான வரி அலுவலகத்திற்க்கு சென்றேன். அங்கு நடந்தைவைகளை கூறும் முன்பு என் பணத்தை எடுத்தவனை வாழ்த்தி விடுகிறேன்.

என்னிடமிருந்து எடுத்த ரூ.280/- வட்டியுடன் 365ஆக மாற்றி, 365 நாட்களுக்கு அவனுக்கு ஆண்மை எழுச்சி பெறாமல் அவதிபட வேண்டும் என சபிக்கிறேன்.

வருமான வரி அலுவலகம் Civic Centre என்னும் கட்டிடத்தில் இருக்கிறது. இது வழக்கமான அரசு அலுவலகம் இயங்கும் பழைய கட்டிடம் போல இல்லாமல். I.T. மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கும் கண்ணாடி வைத்து கட்டிய புதிய கட்டிடமாக இருந்தது.

தேடிபிடித்து வாயிலை கண்டுபிடித்தால், வேறு ஒரு வாயில் வழியாக நுழைவு சீட்டு வாங்கி கொண்டு உள்ளே போக வேண்டும் என கூறினார்கள். தேடி பிடித்து அந்த நுழைவு வாயில் வழியாக சென்றேன். இரண்டு வாயில்களிலும் 4 வாயிற்காப்பாளர்கள் இருந்தார்கள். மிகவும் தன்மையாக பேசினார்கள். இது ஒரு அதிசிய நிகழ்ச்சி. உதவிகரமாகவும் இருந்தார்கள். நுழைவு சீட்டு வாங்க எங்கிருந்து போக வேண்டும் என முழித்து கொண்டிருந்த போது, உள்ளே இருந்த ஊழியர் பார்த்து விட்டு அவர் வெளியே வந்து உள்ளே அழைத்து சென்றார். இதுவும் ஒரு அதிசயம்.  எங்கே போக வேண்டும் என்று கேட்டு சீட்டு எழுதி கொடுத்து வழியும் சொன்னார். வருகை பதிவேட்டில் குறிப்பு எழுத உதவினார். இதுவும் அதிசயம். உள்ளே நடைபாதையில் எவ்வித குப்பையும் இல்லாமல் , அழகாக கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. தொட்டியில் பூச்செடிகள் வைத்து தண்ணீர் ஊற்றி அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது.

கட்டிடத்தின் வெளி பகுதியில் எங்கும் குப்பைகள் இல்லை என்பதை மீண்டும் குறிப்பிட வேண்டும். கட்டிடத்திற்க்குள் நுழைந்தேன். தரையை துடைத்து கொண்டிருந்தார்கள். Mall போன்ற கட்டிடங்களில் தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டிருப்பார்களே அவ்வாறு ஈர துணியால் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கு உட்கார்ந்திருந்த ஊழியர் எங்கே போக வேண்டும் என கேட்டு வழி காட்டினார். 9 வது மாடிக்கு சென்றேன். அங்கிருந்த ஊழியர் விசாரித்து விட்டு நான் 13 வது மாடி போக வேண்டும் என கூறினார். 13வது மாடி சென்ற போது, 12 மாடி போக வேண்டும் என கூறினார். பின்பு 12 மாடி சென்று ஊழியரை சந்தித்தேன். இவ்வாறு மாடி மாறி போக காரணம் நானும் எனது தேவையை, சரியாக சொல்லாததும் காரணம். ஆனால், மிகவும் அன்பாக வழி காட்டினார்கள்.

12 வது மாடி ஊழியர் எனது குறைகளை விசாரித்து, பின்பு நேற்று வந்திருந்தால் உங்கள் வேலை முடிந்திருக்கும். இன்று முடியாது. மேலதிகாரி நேற்று மாற்றலாகி சென்று விட்டார் எனவே எந்த கனினியும் இயக்க முடியாது. எல்லோரும் வேலை பார்க்காமல் உட்கார்ந்து இருக்கிறோம். புதிய அதிகாரி வந்து computer server அவர் இயக்கிய பிறகு தான் எங்களால் வேலை செய்ய முடியும் என்றும் இன்னும் சில தினங்களில் புதியவர் பொறுப்பேற்ப்பார் என்றும் எனவே ஒரு வாரம் கழித்து வரும்படி கூறினார். அவருடைய அலுவலக தொலைபேசி எண்ணையும் கொடுத்தார். தனது தனிப்பட்ட அலைபேசி எண்ணையும் கொடுத்தார். அலைபேசி அலுவலக நேரத்தில் வேலை செய்யாது என்றும் , அலுவலக நேரத்தில் அலுவலக எண்ணில் பேசும்படியும், அப்படி இயலாத பட்சத்தில் மாலை நேரத்தில் அவரது அலைபேசியில் பேசி, கனினி இயங்குகிறதா என கேட்டுவிட்டு வரும்படி கூறினார். வீனாக அலையவேண்டாம் என்று கூறினார். அடுத்த முறை என்னென்ன ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார். மிகவும் பொருமையாகவும் அன்புடனும் பேசினார். 

பின்பு புறப்படும் போது, எனது மணிபர்ஸ் கானாமல் போய் பணம் திருடு போனது பற்றி கூறினேன். விரிவாக விசாரித்து விட்டு, தற்போது உடனடியாக ஏதாவது பணம் தேவையென்றால் உதவி செய்வதாக கூறினார். அவருடன் இருந்த ஊழியரும் உதவி செய்வதாக கூறினார். நான் சமாளித்து விடுவேன் தேவையில்லை என்று கூறி விட்டு வந்து விட்டேன்.

அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் அன்புடன் பொறுமையாக தெளிவாக பேசியது பெரிய ஆறுதல். இது ஒரு அதிசயம்.

இந்த பெரிய அலுவலகம், மற்ற அரசு அலுவலகங்கள் போல் குப்பையும் அசிங்கமாகவும் இல்லாமல் சுத்தமாக இருந்தது. எந்த ஒரு ஊழியரின் மேஜையுலும் கோப்புகள் இல்லை. ஒரு கனினி திரை மட்டுமே உள்ளது. 

வேறு ஒரு வருமான வரி அலுவலகம் உள்ளது. பழைய கட்டிடம். பல முறை புதுபிக்கப்பட்டுள்ளது.வழியெங்கும் அலமாரிகள் இருக்கும். அலமாரிகள் பூட்டியும் பூட்டாமலும் இருக்கும். கோப்புகள் வழிந்து கொண்டிருக்கும். அலமாரிகளின் மேற்புறமும் கோப்புகள் சிதறி கிடக்கும். அறை உள்ளே , மேஜையில் கோப்புகள் நிறைய இருக்கும். அந்த கோப்புகளின் நடுவே ஊழியர்களை தேடி பிடிக்க வேண்டும். சில அறைகளில் பெரிய மேஜை இருக்கும் அதில் நான்கு புறமும் நான்கு ஊழியர்கள் அமர்ந்து வேலை பார்த்துகொண்டிருப்பார்கள். எப்போதும், யாரையும் உட்கார வைத்து பேசுவதில்லை. ஒரு முறை சென்ற போது, ஒரு பெண் ஊழியர், நாற்காலியில் குத்துகாலிட்டு உட்கார்ந்து கொண்டு,  சமோசா சாப்பிட்டுக்கொண்டு என்னிடம் வேண்டா வெறுப்பாக பேசிக்கொண்டிருந்தார். கிட்ட தட்ட அரைமணி நேரம் பேசியும் உட்கார சொல்லவில்லை.
 
அங்கிருக்கும் ஊழியர்கள் என்னிடம் பணம் கிடைக்கும் என்ற நிலையில் மட்டுமே உட்கார வைத்து பேசுவார்கள்.  அதிகாரியை பார்க்க அறைக்கு செல்ல சீட்டு எழுதி கொடுக்க வேண்டும். அந்த சீட்டை உள்ளே எடுத்துகொண்டு தருவதற்க்கு பணம் கொடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அலுவலகங்களில் அனுபவப்பட்ட எனக்கு இன்றைய அலுவலகமும், அதன் ஊழியர்கள் தன்மையாக நடந்து கொண்டதும் ஆச்சரியத்தை கொடுத்ததுடன் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

எல்லா அரசு அலுவலகங்களும் இது போன்று சுத்தமாகவும், ஊழியர்கள் தன்மையுடனும் நடந்து கொண்டால் மக்கள் ஏன் குறை சொல்லப்போகிறார்கள்.

அடுத்த முறை செல்லும் போது எனது வேலை முடிந்து விடுமா என பார்க்க வேண்டும்.

எனக்கு உதவி செய்ய முன் வந்த ஊழியர்களுக்கு, தினமும் 2 முறை ஆண்மை எழுச்சி பெற்றி மகிழ்சியாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

1 comment:

  1. மிக யதார்த்தமாக உள்ளது....
    சாபமும் வரமும்....

    ReplyDelete