Sunday 1 June 2014

குழந்தைகளின் பணத்தை கொள்ளையிடும் வங்கிகள்



அண்மையில் மத்திய வங்கி, 10 வயதுக்கு மேற்ப்பட்ட குழந்தைகள் வங்கிகளில் அவர்களே சேமிப்பு கணக்கை துவக்கி இயக்கலாம் என அறிவித்துள்ளது.

வங்கிகள்,  குழந்தைகளின் வங்கி கணக்கை துவக்கும் போது விதிக்கும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இவைகளை நிரணயித்துக்கொள்ளாலம் எனவும் இந்த வகையில் இவை பாதுகாப்பானதும் என்று கூறியுள்ளது. மேலும், ATM Internet வசதிகளையும் அளிக்கலாம் என கூறியுள்ளது.

இதனால், வங்கிகளில் நிறைய கணக்குகள் துவக்கப்படும் என்றும் குழந்தைகளிடம் இருக்கும் சிறு சேமிப்பு பணம் வங்கிகளில் சேமிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மேலோட்டமாக பார்த்தால் இது சிறந்த திட்டம் போல தான் தோன்றுகிறது. நாடு முழுவதும் குழந்தைகளிடம் சிறு சேமிப்பு பணம் எவ்வளவு இருக்கும், ஒரு சில கோடிகள் இருக்கும். ஆனால், குழந்தைகளின் பெயரில், பெற்றோர் பாதுகாவலர் வைத்திருக்கும் பணம் நிறைய கோடிகள் இருக்கும்

குழந்தைகளிடம் எப்படி பணம் வருகிறது.

குழந்தைகளின் பிறந்த நாள் தினம் அல்லது மற்ற விஷேச தினங்களில் பெரியவர்கள் கொடுக்கும் பணம் தான் பொதுவாக இருக்கும்.

ஆனால், இன்றைய நிலையில் குழந்தைகளும் பணம் சம்பாதிக்கிறார்கள் 
.
1) ஏழை குழந்தைகள் வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதில் சேமிக்கும் பணத்தை தான் நம்பும் பெரியவர்களிடம் கொடுத்து வைக்கிறார்கள். சில சமயம் அந்த பெரியவர்கள் ஏமாற்றி விடுவதும் உண்டு.

2) நடுத்தர குடுபங்களின் குழந்தைகள் இப்போது பல வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர்.

விளம்பரங்களில் நடிப்பது, திரைப்படங்களில் நடிப்பது, விளையாட்டு போட்டிகளில் பரிசு பெறுவது, தொலைகாட்சி போட்டிகளில் வெற்றி பெறுவது , நட்ட ஈட்டு தொகை பெறுவது, தாத்தா சொத்து பேரன் பேத்திகளுக்கு என்ற முறையில் கிடைக்கும் பணம் மற்றும் பல

இவைகள் தற்போது, குழந்தைகளின் பெற்றோர் மூலம் அல்லது 
பாதுகாவலர் மூலம் பாதுகாக்கப்படுகிறது. குழந்தைகளின் முன்னேற்றத்திற்க்காக செலவழிக்கப்படுகிறது. நல்ல இடங்களில் முதலீடு செய்பவர்களும் உண்டு. ஒரு சில இடங்களில் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி பாதுகாப்பாக இருக்கும் பணம் , குழந்தைகளிடம் சென்றால் பணத்தின் மதிப்பு தெரியாமல் செலவழிப்பார்கள். இவர்களை சுலபமாக ஏமாற்றி, ATM Internet மூலம் பணத்தை எடுத்து விடுவார்கள். பெரியவர்களே பலமுறை ஏமாந்த செய்திகளை தினமும் கேள்விப்படுகிறோம்.

இப்போதும் குழந்தைகளின் பணம் வங்கிகளில் தான் இருக்கிறது. எனவே, தனியாக குழந்தைகளுக்கு வங்கி கணக்கு ஆரம்பித்து இயக்க அனுமதிப்பதால் வங்கிகளுக்கு பெரிய அளவில் பணம் கிடைத்துவிட போவதில்லை. வங்கி கணக்கு எங்களிடம் நிறைய இருக்கிறது என்று கூற வேண்டுமானலும் பயன்படலாமே தவிர வேறு எந்த பயனும் ஏற்ப்படாது. ஆனால் தீமைகள் பல ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே, இந்த திட்டத்தை மத்திய வங்கி மீண்டும் பரிசீலினை செய்து கைவிட வேண்டும்.


No comments:

Post a Comment