Friday 13 June 2014

அடிமைகள உருவாக்கப்படுகின்றனர்



யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் (UNION PUBLIC SERVICE COMMISSION) 2013ஆம் ஆண்டுக்கான  I.A.S. இறுதி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 3,23,949 பேர் தகுதி தேர்வில் கலந்து கொண்டு, அதில் 14,959 பேர் மட்டுமே இறுதி தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். அதில் 1,122 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று பணி அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் I.A.S. , I.F.S. மற்றும் I.P.S. பணிகளில் அமர்த்தப்படுவர்.

இவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் அதற்க்காக அவர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. பயிற்ச்சி கட்டணமும் அதிகம். ஒரு சிலருக்கு தகுதி அடிப்படையில், இலவச பயிற்ச்சி கிடைக்கிறது.

இதில் சாதாரண பட்ட படிப்பு படித்தவர்களும், மற்றும் பிரபலமான I.I.T.Kanpur ல் பொறியியல் மற்றும் I.I.M Lucknowல் முதுநிலை நிர்வாகம் படித்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இவர் 2வது முறை தேர்வு எழுதி முதலாவது நபராக வெற்றிபெற்றுள்ளார்.

இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் டெல்லி பல்கலைகழகத்தில் சாதாரண பட்டபடிப்பு Biochemistry படித்தவர். இவரும் 2வது முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வளவு சிறந்த படிப்பு படித்தவர் இந்த படிப்பிலேயே லட்ச கணக்கான மாத வருமானத்துடன் வேலையில் சேர முடியும். இருப்பினும் சமூக அந்தஸ்த்து மற்றும் அதிகாரத்துடன் கூடிய பதவியை அடைய , சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்

இவர்கள் படித்த முட்டாள்களிடமும், படிக்காத அறிவாளிகளிடமும் வேலை செய்ய வேண்டியுள்ளது. அரசியல்வாதிகள் இவர்களை பல சமயங்களில் மனிதர்களாக கூட மதிப்பதில்லை.

நாடு இயங்கிகொண்டிருப்பதற்க்கு காரணமே இவர்கள் தான். அரசு செய்யும் நன்மைக்கு தீமைக்கும் இவர்களே காரணம். 

நன்மை செய்ய வேண்டும் என்ற கனவுடன் இந்த படிப்பை படித்து வேலைக்கு சேர்கின்றனர். ஆனால், இவர்களால்  நிர்வாக அமைப்பை மாற்ற முடிவதில்லை. நிர்வாக அமைப்பு இவர்களை மாற்றி விடுகிறது. இவர்களும் வேறு வழியில்லாமல் மாறி விடுகின்றனர். முரண்டு பிடித்து மக்களுக்கு நன்மை செய்ய புறப்படும் அதிகாரிகள் உயிர் வாழ்வதே கடினம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், இது அரசியல்வாதிகளுக்கு அடிமைகளை உருவாக்கும் தேர்வு போல அமைந்துள்ளது.

இவர்களது நல்ல செயல்களை , ஆலோசனைகளை அரசியல்வாதிகள் பயன்படுத்திகொண்டால், நாடு முன்னேறும்.


தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இந்த பதிவை மீண்டும் படித்து பாருங்கள். இதில் இரண்டு முறை I.A.S. என் எழுதியுள்ளேன்.

எனது வலைபூவில் sudhandhiraparavai.blogspot.com ல்100வது பதிவு

No comments:

Post a Comment