Sunday 16 February 2014

ஆலய தரிசனம் - திருப்பறங்குன்றம் முருகன் கோவில்

திருப்பறங்குன்றம் முருகன் கோவில்::


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், இரண்டாவதாக (02.02.2014 - மாலை) சென்ற கோவில் திருப்பறங்குன்றம் முருகன் கோவில். இதற்கு முன்பு பலமுறை சென்றுள்ளேன். முன்பெல்லாம் நேராக சென்று முருகனை வழிபட்டுவிட்டு வரலாம். ஆனால், இப்போது, நீண்ட வரிசையில் நின்று தரிசிக்க வேண்டியுள்ளது.

கோயில்கள் வழிபாட்டு தலங்களாக இல்லாமல் , சுற்றுலா தளமாகவும் , வியாபார தளமாகவும் மாறி போனதே இதற்கு காரணம் என தோன்றுகிறது. மக்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகரித்துவிட்டது என சொல்லமுடியாது. கடவுள் நம்பிக்கையும் உண்மையான வழிபாடும் ஏற்ப்பட்டிருந்தால் நாட்டில் இவ்வளவு அவலங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்காது.

பொதுவாது, கோவில் உள்ள ஊரில் பொதுமக்களில் சிலர் தினமும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். ஆனால், இப்படி கூட்டம் அதிகமாகி பலமணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டியிருப்பதால், தினமும் வருவதை தவிர்த்திருப்பார்கள் என நினைக்கிறேன். 

வரிசையாக நிற்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான தடுப்புகள். அதிலும் துணிக்கடைகாரர்கள், நகைக்கடைகாரர்களின் விளம்பரங்கள். வியாபாரிகள் விளம்பரம் செய்வதில் கெட்டிகாரர்கள். பெண்கள் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் சும்மா நிற்கும் போது, அவர்கள் பார்வையில் படும்படி இப்படி அவர்களுக்கு பிடித்தமான பொருள்களை விளம்பரப்படுத்தியிருப்பது நல்ல வியாபார உத்தி. வரிசையில் நிற்கும் போது பக்கவாட்டில் பல சிலைகள் வைத்திருப்பது பார்க்கமுடிகிறது. அதை இருப்பு தடுப்பால் தடுத்து வைத்திருப்பது நன்றாக இல்லை. அவர்களையும் குறை சொல்ல முடியாது. நமது பொது ஜனங்கள் அதையும் சேதப்படுத்துவார்கள். சுவர்களில் அவர்கள்து பெயரை எழுதி வைப்பதுடன் அம்பு குறியையும் வரைந்து வைப்பார்கள். கோவிலை கட்டியவரின் பெயரோ, சிலைகளை செய்தவர்களின் பெயரோ காணமுடியவில்லை. ஆனால், tubelight  போட்டவரின் பெயர் அதிலேயே எழதப்பட்டு விளம்பரமாக நிற்கி’றது.

சுற்றுபிரகாரத்தில், நயன்மார்கள் சிலைகள் உள்ளது. எல்லா கோயில்களிலும் அவ்வாறு உள்ளது. அனைத்து நாயன்மார்களின் சிலைகளும் நிற்பது போன்ற நிலையில் உள்ளது. அனைத்து நாயன்மார்களின் முகங்களும் ஒன்றுபோல் உள்ளது. ஆடைகளும், சிகை அலங்காரமும் வேறுப்படுகிறது. சிலை வடித்த சிற்பி, அனைத்து நாயன்மார்களையும் நேரில் பார்த்த்தில்லை. எனவே , தங்களது கற்பனையில் சிறிய வேறுபாடுகளுடன் மொத்தமாக சிலை வடித்து கொடுத்திருப்பார்.

சுவர் முழுவதும் பழைய எழுத்துக்களில் கல்வெட்டுக்கள் இருக்கிறது. படிப்பதற்க்கு முயற்சி செய்தேன். பயன் ஒன்றும் இல்லை. அங்கு எழுதியிருப்பதை எல்லாம் யாராவது இன்றைய மொழியில் ஆவணப்படுத்தியுள்ளார்களா என தெரியவில்லை.

அர்சனை தட்டு வாங்கிகொண்டு உள்ளே சென்றிருந்தோம். மூலவரை பார்பதற்க்கு சற்று முன்னால் ஒரு அர்சகர் நமது கையில் உள்ள அர்ச்சனை தட்டிலிருந்து தேங்காயை எடுத்து உடைத்து நமது அர்ச்சனை தட்டில் வைத்து விட்டு காசு கேட்கிறார். மக்களும் ரூ.10/- கொடுக்கிறார்கள்  மூலவர் முன்பு வந்தவுடன் அங்கிருக்கும் அர்ச்சகர் இவர் தான் மூலவர் என்று குறிப்பிடுகிறார். மூலவருக்கு அருகில் இருட்டாக இருக்கிறது. சரியாக சாமி சிலை தெரியவில்லை. அர்ச்சகர் கையில் வைத்துள்ள தட்டில் ஒரு தீபம் எரிகிறது. அதை தொட்டு வணங்க வேண்டியுள்ளது. அவர் தட்சனை கேட்கவில்லை. மக்கள் சில்லறையை தட்டில் போடுகின்றனர். தேங்காய் உடைப்பவர் வெட்கம் இன்றி காசு கேட்பதால் மக்கள் தயங்காமல் ரூ.10 கொடுக்கின்றனர். இவர் கேட்காததால் சில்லறை போடுகின்றனர். மக்களின் மனநிலை அறிந்தே தேங்காய் உடைப்பவர் வசூல் செய்கிறார். மக்களின் மனநிலையும் மாறவேண்டும்.

முன்பெல்லாம் அர்ச்சனை தட்டு எடுத்துசென்றால், அதை அர்ச்சகர் வாங்கிகொண்டு நமது பெயரையும், ராசியும் கோத்திரமும் கேட்டுகொண்டு மந்திரம் சொல்லி தீபாரதணை காட்டி தேங்காய் உடைத்து நாம் கொண்டு சென்ற பூவை சாமியின் மீது போட்டு விட்டு, அங்கு ஏற்கனவே இருக்கும் பூவில் சிறிது எடுத்து நமது அர்ச்சனை தட்டில் வைத்து நமக்கு திருப்பி தருவார். மக்களும் தீபாரதனையை கண்களில் ஒத்திகொண்டு அவர் கொடுக்கும் திருநீ’ற்றை நெற்றியில் பூசிகொள்ளும் பழக்கம் இருந்தது. பின்பு அர்ச்சகருக்கு தட்சனை கொடுக்கும் பழக்கம் இருந்தது.

இப்போது அப்படி ஏதுவும் நடக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.தினமும் ஆயிரகணக்கான அர்சனைகள் செய்ய முடியாது. காலத்திற்கேற்றவாரு மாறவேண்டியுள்ளது.

சுவாமியின் முன்பு நின்று சிறிய பாடல்கள பாடி, தீபாரதனை ஓளியில் சுவாமியை தரிசித்து, கோரிக்கைகளை சமர்பிக்க நேரம் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் கோவிலுக்கு செல்வது, நன்றாக சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு வரும் சுகம் இப்போது இல்லை..

இப்போது, சுவாமியை பார்ப்பது, பொருட்காட்சியில் வேடிக்கை பார்த்துவிட்டு உடனடியாக நகருவது போல உள்ளது. இப்படி சுவாமியை தரிசித்து நமது பக்தியை வெளிப்படுத்துவதை விட, வீட்டிலேயே சுவாமியை வணங்கலாம்.

வரும் மக்களை வரக்கூடாது என்று தடுக்கமுடியாத நிலையில், இப்படிபட்ட சுவாமி தரிசனங்கள் செய்துதான் மனதிருப்தி அடைய முடியும்.
            *******************************************************************
எனது பிராத்தனையும் பலனும்

நான் : அப்பனே முருகா சண்முகா, ஞனாபண்டிதா, கந்தா கடம்பா கதிர்வேலா என்னைய மட்டும் காப்பாத்து. என்னைய மட்டும் என் பொண்டாட்டிகிட்டேயிருந்து காப்பாத்து.

முருகன்: பக்தா, உன் கோரிக்கையை கேட்டோம். அவ்வையார் அரிது அரிது என்று பாடிய பாடலில் அவர் பாடாமல் விட்ட வரி ஒன்று உண்டு. அதாவது “ அரிது அரிது மனைவியுடன் வாழ்வது அரிது. அதனினும் அரிது அவளிடமிருந்து காப்பற்றப்படுவது அரிது “

உலகத்தில் ஜாதி வேறுபாடுகள் இருக்ககூடாது என்பதை மக்களுக்கு உணர்த்த  நான் உயர் ஜாதி பெண் தெய்வயானையையும் , தாழ்ந்த ஜாதி பெண் வள்ளியையும் மணந்து அனைத்து மக்களும் சமம் என உணர்த்தினேன். ஆனால், மக்கள் நான் சொல்லியதை தவறாக உணர்ந்துகொண்டு, முருகனுக்கே இரண்டு மனைவிகள இருக்கும் போது எனக்கு இருக்ககூடாத என விவாதிக்கிறார்கள்.

ஆனால், நான் இந்த இருவருடன் பாடும் பாட்டை யாரிடம் சொல்வது என தவித்து கொண்டிருந்தேன். இன்று நீ சிக்கிகொண்டாய். என் சோக கதையை சற்று கேள் பக்தா.

தெய்வயானை தினமும் புளி சாதமும் தயிர் சாதமும் சாப்பிட சொல்கிறாள். வள்ளி தினமும் காக்கை குருவியை சுட்டுகொண்டு வந்து சாப்பிட சொல்கிறாள். இருவரிடமும் சிக்கி சின்னாபின்னாமாகி கொண்டிருக்கிறேன். அவர்கள் இருவரும் அவர்களுக்குள் சண்டை போட்டுகொண்டு என்னிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிகொண்டார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து மானம் காத்து கொள்ள கோமணத்துடன் மலைமீது ஏறி நிற்கிறேன். இது தெரியாமல் நீயும் உன்னை போன்ற பக்தர்களும் இப்படி வரம் கேட்டால் நான் எப்படி நிறைவேற்ற முடியும்.

மனைவியிடமிருந்து உன்னை காப்பாற்றி கொள்ள வழியிருக்கிறது. பூலோகத்தில் விவாகரத்து என்ற வழக்கம் உள்ளது. நீ விடுதலை பெறமுடியும். ஆனால் , தேவலோகத்தில் அந்த வழக்கம் இல்லை. அதனால் நான் அவதிபட்டுகொண்டிருக்கிறேன்.

ஆனால், நீ வரம் கேட்டுவிட்டாய். நான் தராவிட்டால் நீ என்னை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளமாட்டாய். அதனால் ஒன்று செய். பூலோகத்தில் சில ஆண்கள் பல பெண்களை மணந்து மகிழ்சியாக வாழ்வதாக அறிகிறேன். அவர்களிடம் அவர்களால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என்று கேட்டு அறிந்து எனக்கு சொல் அல்லது நீ எதேனும் செய்து, எனது இரண்டு மனைவிகளிடமிருந்து யாரவாது ஒருவரிடமிருந்து விடுதலை வாங்கி கொடு பின்பு நான் உனக்கு உன் மனைவியிடமிருந்து விடுதலை வாங்கி கொடுக்கிறேன். என்ன சம்மதமா பக்தா. ஏன் வாயடைத்து போயிருக்கிறாய். உன்னால் உதவ முடியுமா முடியாத சீக்கிரம் சொல். அவர்கள் இருவரும் வந்து விடுவார்கள் என்னை போட்டு கொடுத்து விடாதே.  சீக்கிரம் நான் சொன்னதை செய். சீக்கிரம் வெளியே போ.

நான் : ” கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போன அங்கே ரெண்டு கொடுமை கூத்தாடிகினு நிக்குது “ இவனே நம்பி பிரயோசனம் ஒன்றும் இல்லை . பேசாம பொண்டாட்டி சொல்றத கேட்டுகிட்டு , வெந்தத தின்னுட்டு , விதி வந்த  போய் சேர வேண்டியது தான்.






No comments:

Post a Comment