Sunday 16 February 2014

ஆலய தரிசனம் - நரசிங்க பெருமாள் கோவில்

நரசிங்க பெருமாள் கோவில்::


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், முதலில் (02.02.2014 - காலை) சென்று பார்த்த கோயில் அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்.  மதுரை மாவட்டத்தில், ஒத்தகடை பகுதியில் யானை மலையில் அமைந்துள்ளது. இது ஒரு விஷ்ணு கோவில்.  இங்கு நடந்த நண்பன் வீட்டு திருமணத்திற்க்காக சென்றேன். சிறிய கோயில். விஷ்ணு நரசிம்மர் வடிவத்தில் அமைந்த கோவில். விஷ்ணுவின் மனைவி மகாலட்சுமி, நரசிங்கவல்லி தாயார் என்ற பெயரில் அமைந்துள்ளார். கோவில் அமைதியாக உள்ளது. மற்ற பெரிய கோயில்களில் உள்ளது போல நீண்ட வரிசையில் நின்று தரிசிக்க வேண்டிய அவசியம் ஏற்ப்படவில்லை. கோவிலின் வெளிப்புறத்தில் ஒரு தாமரை குளம் உள்ளது. நான் சென்ற போது நிறைய தாமரை மலர்கள் பூத்திருந்தது. கோவிலின் பின்புறம் யானைமலை அமைந்துள்ளது. இது ஒரு குடவரை கோயில் எனப்படுகிறது.

மிகவும் இயற்கையாக மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோவிலை இன்னும் நன்றாக பராமரிக்கலாம். தாமரை குளம் மிகவும் அசுத்தமாக இருக்கிறது. கூட்டம் அதிகம் வருவதில்லை என்பதால் வியாபாரிகள் கூட்டம் கிடையாது. குறைந்தபட்சம், பக்தர்களுக்கு குடி தண்ணீர் வசதியை கோவில் நிர்வாகமோ அல்லது அரசோ ஏற்ப்பாடு செய்வது அவசியம்.

கூட்டம் குறைவாக வரும் கோவில் என்பதால், வரிசையில் அனுப்பி பணம் வசூல் செய்யும் புரோகிதர் கும்பல் இங்கு இல்லை. நிதானமாக தரிசனம் செய்ய முடிகிறது. பொதுவாக விஷ்ணு கோவில்களில் , புரோகிதர் சமுதாயம், கோவிலின் சிறப்பு அம்சம் என்று கூறி பிரபலப்படுத்தி பணம் வசூல் செய்யும். விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் இருப்பதால் பயந்து இது போன்ற காரியங்களை செய்யவில்லை என தோன்றுகிறது.

கோவில் தலவரலாறுபடி , பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சியளித்துள்ளார். அவரது உக்கிரத்தை நிறுத்த அவரது மனைவி, மகாலட்சுமியை அழைத்து வந்துள்ளனர். அதன் பின்பே நரசிம்மரின் உக்கிரம் தணிந்து , யோகநரசிம்மராக மாறியுள்ளார்.

கடவுள் கூட மனைவிக்கு பயந்து தனது கோபத்தை அடக்கி , யோக நிலையில் இருக்கிறார்.

அதன் தொடர்சியாக தான் மனித இனமும் , மனைவியிடம் கணவர்கள் அடங்கி வாய் பொத்தி சேவகம் செய்து, யோக நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment