Wednesday 19 February 2014

ராஜீவ்காந்தி கொலைவழக்கு தீர்ப்பு

மரண தண்டனை::



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுப்பெற்று வந்தது.
தற்போது, உச்ச நீதி மன்றம் , கருனை மனு மீது 13 ஆண்டு காலமாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தண்டனையை ரத்து செய்வதாக கூறியுள்ளது. மேலும், தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யலாம் எனவும் கூறியுள்ளது.
இது குறித்து தமிழக மக்களும், அரசியல்வாதிகளும் மகிழ்சி அடைந்துள்ளதுடன் , தங்களது முயற்சியால் தான் தண்டனை ரத்து செய்யப்பட்ட்து என்றும், மக்களும் சிலரை பாரட்டியும் சிலரை விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விடுதலை குறித்து இவ்வளவு மகிழ்சி அடைய காரணம் உள்ளதா ?
1.       இவர்கள் குற்றம் செய்யவில்லை என்ற காரணத்தினால் விடுதலை செய்யப்படவில்லை.
2.       குற்றம் நீருபிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் விடுதலை செய்யப்படவில்லை.
3.       இவர்கள் செய்த குற்றம், குற்றத்திற்க்கு உடந்தையாக இருந்தது மட்டுமே அதனால், தூக்கு தண்டனை போன்ற அதிகப்பட்ச தண்டனை தேவையில்லையென்றும், மிக குறைந்த தண்டனை போதுமானதுயென்றும், ஏற்கனவே 27 வருடம் சிறையிலிருந்து விட்ட காரணத்தினால் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பு வரவில்லை.

எனவே, இதன் மூலம் குற்றம் செய்தது உண்மை என்றும் விதித்த தண்டனை சரியென்றும் பொருள்படுகிறது.

இவர்கள் தற்போது விடுதலையானதற்க்கு காரணம் கருனை மனு மீது நடவடிக்கை எடுக்க காலதாமதமானதுதான்.

கருனை மனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தண்டனை நிறைவேறியிருந்தால் என்ன நடந்திருக்கும். மேலும், பொது வெளியில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தான் பெரும்பாலோரும் வாதாடினார்கள். குற்றமே செய்யவில்லை எனவே மொத்த தண்டனையும் ரத்து செய்ய வேண்டும் என கோரவில்லை. மேலும், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருந்த மூவரது தண்டனையை மட்டுமே ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்களை தவிர, ஆயுள் தண்டனை பெற்ற மற்ற 4 பேரது தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை எழவில்லை. இதிலும் குறிப்பாக, தமிழர்களுக்காக ஆட்சி நடத்துவதாக சொல்லும் எந்த அரசியல்வாதியும் இதை வெளிப்படையாக கூறவில்லை.

மக்களிடையே ஒரு பிரிவினர், இலங்கையில் நடந்து முடிந்த போருக்கு பின்பு தான் இந்த விசயத்தில் அதிக அக்கறை காட்டினார்கள். 

சமூக வலைதளங்களில், பல்வேறு வாதங்கள வைக்கப்பட்டது.

1)      குற்றமே செய்யவில்லை என்பது
2)      இது அதிக பட்சதணடனை என்பது
3)      தமிழன் என்பதால் பாரபட்சமாக தண்டனை வழங்கப்பட்டது
4)      குற்றத்தில் பங்குகொண்ட மற்றவர்களுக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லையென்பது.
5)      சதி திட்டம் தீட்டியவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் தண்டணை வழங்கவேண்டுமென்பது.
6)      நீதி விசாரணை முறையாக நடைபெறவில்லையென்றும், மறுவிசாரனை நடத்தவேண்டும் என்றும் அதில் பலரை குற்றவாளிகளாக சேர்த்து விசாரிக்கவேண்டுமென்பது.

தற்போது இவை எதுவுமே நடைப்பெறவில்லை .

இந்த கொலைவழக்கு தனிமனித கொலை வழக்கு அல்ல. உள்ளூர் அரசியல்வாதிகள், இந்திய அரசியல்வாதிகள் மற்றும் மற்ற நாடுகள் இனைந்து நிறைவேற்றிய கொலை. இது அரசியல் கொலை..
உலகில் பல்வேறு காலகட்டங்களில், பல நாடுகளில் இது போன்ற அரசியல் கொலைகள் நடந்துள்ளது. அமெரிக்காவில் நடந்த கென்னடி கொலை வழக்கு முதல், அண்மையில் பாக்கிஸ்தானில் நடந்த பெனசீர் புட்டோ கொலை வரை தனிமனிதர்களால் செய்யப்படவில்லை. உலக அளவில் சதி திட்டம் தீட்டப்பெற்று, பலரது உதவியுடன் உள்ளூர் மக்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது. திட்டத்தை நிறைவேற்றிய உள்ளுர் மக்கள் தான் தண்டனை பெருகின்றனர்.

சதி திட்டம் தீட்டியவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் , கொலையால் பயன் அடைந்தவர்கள் அனைவரும் தப்பித்துவிடுகின்றனர். இதுவரை இப்படி தான் நடந்துள்ளது. இனிமேலும் இப்படி தான் நடக்கும்.

இப்படி சதி திட்டம் செய்து அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்படும் போது, அதனால் ஏற்ப்படும் பின்விளைவுகள் மிகவும் மோசமாக உள்ளது. ராஜீவ் காந்தி கொலையினால், இலங்கையில் வாழும் தமிழ் இனம் மிகவும் மோசமான முறையில் போரை சந்திக்க நேர்ந்தது பல ஆயிரக்கணக்கான மக்களின் இழப்புக்கு பின் தோல்வியில் முடிவடைந்தது. அது நீருபூத்த நெருப்பாக இன்றுனம் கனந்து கொண்டிருக்கிறது.

இந்திரா காந்தி கொல்லப்பட்டதால், சீக்கிய சமூதாயமும் பல்வேறு இழப்புக்களை சந்தித்தது. அவர்களது கோபமும் இன்னமும் தணியவில்லை.

தமிழினத்தின் கோபமும், சீக்கிய சமுதாயத்தின் கோபமும் முற்றிலுமாக தணியவேண்டுமெனில், காங்கிரஸ் கட்சியிலிருந்து நேரு குடும்ப வாரிசுகள் அரசியலிலிருந்து முழுவதுமாக விலக வேண்டும்.

இந்த கொலை வழக்கின் தற்போதைய தீர்ப்பின் படி, தமிழன் விடுதலை செய்யப்பட்டதற்க்காக கொண்டாடும் பொதுமக்கள் , இதே குற்றத்தை தமிழனாக இல்லாமல் வேறு மொழி பேசும் இனத்த்தை சேர்ந்தவனாக இருந்திருந்தால், அவர்களுக்காக இவ்வளவு வாதாடியிருப்பார்களா ?

இது போன்ற தீவிரவாத செய்ல்களில் கொல்லப்பட்டவர் உங்கள் வீட்டு நபராக இருக்கும்பட்சத்தில், இதுபோன்று தான் குற்றம் செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என போராடுவார்களா ? சற்று சிந்தித்து பாருங்கள்.

மரண தண்டனை விதிக்கப்படுவதால் குற்றங்கள் நடைப்பெறாமல் இருக்கிறதா. அது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே, மரண தண்டனை தேவைதானா என்பதை உலக நாடுகள் அவசியம் யோசிக்க வேண்டும். அதிக பட்சமாக, கொடுர குற்றங்கள் செய்தவர் அவர் இயற்க்கையாக மரனம் அடையும் வரை சிறையில் இருக்கும்படி தண்டனை வழங்கலாம்.

மரண தண்டனையை கல்லால் அடித்து கொன்றால் என்ன , கயிற்றில் தொங்க விட்டு கொன்றால் என்ன இரண்டுமே தவறு தான்.



.

No comments:

Post a Comment