Tuesday 25 February 2014

ஆலய தரிசனங்கள்



அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், சென்று வந்த கோவிலகளை பற்றிய சிறு குறிப்புகளை எழுதிவிட்டேன்.
1) மதுரை – ஒத்தக்கடை நரசிங்கபெருமாள் கோவில்
2) மதுரை – திருபரங்குன்றம் முருகன் கோவில்
3) சமயபுரம் – மாரியம்மன் கோவில்
4) திருச்சி – உச்சி பிள்ளையார் கோவில்
5) ஸ்ரீரங்கம் – ரங்கநாதர் கோவில்
6) தஞ்சாவூர் – பிரகதீஸ்வரர் கோவில்
7) ராமேஸ்வரம் – ராமநாத சுவாமி கோவில்
8) சிதம்பரம் – நடராஜர் கோவில்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் எத்தனை நூற்றாண்டுகளாக நடைப்பெறுகிறது என தெரியவில்லை. ஆனால், அனைத்து மக்களும் ஏதெனும் ஒரு சமயத்தில் கடவுளை பற்றி நினைத்ததுடன், அவருடைய அருள் தமக்கு தேவையென வேண்டியிருப்பார்கள். இதில் மதமோ எந்த கடவுள் என்ற பாகுபாடோ இல்லை.
கடவுள் மறுப்பு என்ற விவாதம் ஏற்ப்பட காரணம் இரண்டு வகையானது.
1. தான் நினைக்கும் விதத்தில் வாழ முடியாத காரணத்தாலும் மற்றும் உலகில் ஏற்ப்பட்டிருக்கும் அத்தனை துன்பங்களை கண்டும் காணமல் இருக்கும் ஒரு சக்தியை , கடவுள் என்று ஒப்புக்கொள்ளும் மனநிலை இல்லாமையும் தான் காரணம்.
2. மேலும் கடவுள் வழிபாடு என்ற செய்கையில் கடைப்பிடிக்கப்படும் மூடநம்பிக்கைகளும், வழிப்பாட்டு தளங்களில் நடக்கும் முறைகேடுகளும் ; மற்றும் என் கடவுள் தான் சிறந்தவர் என்று கூறி பிரச்சனையை உண்டுபண்ணி அமைதியை குலைக்கும் நிலையும்; கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் தனிநபர்களின் செயலும், கடவுளின் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்க செய்வதுடன், கடவுள் இல்லையென்று விவாதிக்கவும் வழி ஏற்ப்படுத்துகிறது.
இந்த வித காரணங்களினால் தான் நானும் கடவுள் என்பவர் இருக்கிறாரா என ஐயப்பாடு கொண்டுள்ளேன். மேலும், அப்படி ஒருவர் இருந்தாலும், எனது தேவைகளுக்கு அவரிடம் நான் விண்ணப்பம் அனுப்ப வேண்டியதில்லை. எனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் தானாகவே செய்வார்.
மேலும், கண்ணுக்கு புலப்படாத ஒரு உருவத்தை கடவுள் என்று நம்புவதை விட, கண்ணுக்கு தெரியும் ஐம்பெரும் பூதங்களை – நன்மையும் தீமையும் கலந்து செய்யும் இவைகளை , இந்த மாபெரும் சக்திகளை வணங்குவதே சிறப்பானது என்பது என் கருத்து.
மனித அறிவினால் உணரமுடியாத சக்தியே நம்மை எல்லாம் வழிநடத்துகிறது. அதை கடவுள் என்று பெயரிட்டு வணங்குவதால் மக்களுக்கு நன்மை ஏற்ப்படுகிறது என்றால் ஆட்சேபணை ஒன்றும் இல்லை. ஆனால், அதற்க்காக மூடநம்பிக்கைகளை கடைப்பிடிப்பதும், மற்றவர்களை காயப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் தேவையற்ற செயல்.
நான் கோவில்களுக்கு சென்று வந்த காரணம் கடவுள் நம்பிக்கையினால் அல்ல. எனது மனைவியின் விருப்பத்தின் காரணம். மேலும், பல்வேறு கோவில்களின் தலவரலாறு சிறப்பு தன்மைகளை அறியவும், கட்டிட கலையின் அற்புதத்தை பார்க்கவும், கோவில்கள் அமைந்துள்ள பகுதிகளை பார்ப்பதுடன் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையை அறியவும் பயன்படுத்திகொண்டேன்.
கோவில்களின் கட்டிட கலை என்னை மிகவும் கவர்ந்தாலும், மக்களின் வழிப்பாட்டு முறையும், அவர்களது நம்பிக்கையும் என்னை கவரவில்லை.
கடவுளை வணங்குபவர்கள் மற்றவர்களை புண்படுத்தாமல் அவர்களது செய்ல்களை செய்தால் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.

No comments:

Post a Comment