Monday 24 February 2014

ஆலய தரிசனம் - சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், இறுதியாக    (07.02.2014) சென்ற கோவில் சிதம்பரம் நடராஜர் கோயில். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது.
.
நாங்கள் இரவு நேரத்தில் சென்றோம்.  பேருந்து நிலையத்திலோ அல்லது கோவிலுக்கு அருகிலோ பொருட்டகளை வைத்துவிட்டு கோவிலுக்கு சென்று வரும் வகையில் பாதுகாப்பு பெட்டகங்கள் இல்லாதது பெரிய குறை. ஒரு கடைக்காரர் எங்களது பொருட்களை ஒரு மணி நேரம் வைத்துகொள்வதாகவும், சீக்கிரம் வந்துவிடும்படியும் கூறி பொருட்களை வைத்துக்கொண்டார்.

நாங்கள் கோவிலுக்கு சென்ற போது, தேவியின் ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. வந்த பின்பு தேவிக்கு  தீபாரதனை நடைப்பெற்றது. கூட்டம் அதிகமில்லை. வரிசையில் நின்று தரிசிக்க வேண்டிய அவசியமில்லை. மிக அருகிலிருந்து நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது. 7 பெரிய பாத்திரங்களில் பிரசாதம் வைத்து பூஜை நடந்தது.

நாங்கள் விரைவாக நடராஜரை தரிசிக்க சென்றோம். நான் நடமாடும் நிலையில் உள்ள சிலை இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஒரு சுவாமி சிலை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முகம் மட்டும் தெரிந்தது. தீபாரதனை நடந்தது. இங்கும் கூட்டம் இல்லை.

பின்பு பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசித்தோம். சிவன் ஆலயத்தில் பெருமாள் இருப்பது சிறப்பு.

தேவிக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களை பக்கத்தில் வைத்து பாதுகாப்பாக எடுத்து செல்ல முயற்சி செய்துகொண்டிருந்தனர். ஒரு இளம் தீட்சிதர் (TEEN AGE) ஒவ்வொரு பாத்திரத்திலுமிருந்து கரண்டியல் பிரசாதத்தை எடுத்து சுவைத்துகொண்டிருந்தார். அவருக்கு பசியா அல்லது ருசி காரணமாக அப்படி செய்துகொண்டிருந்தாரா என தெரியவில்லை.
பக்தர்களுக்கு வெறும் வெள்ளை சாதம் மட்டும் பிரசாதமாக வழங்கினார்கள்.

நாங்கள் பிரசாத கடையில் வாங்கி சாப்பிட்டோம். நான் பிரசாத கடையில் பிரசாதம் வாங்கும் போது அவரிடம் விசாரித்தேன். நான் இங்கு நடனமாடும் நிலையில் நடராசரை தரிசிக்க வந்தேன். ஆனால், அப்படி ஒரு சந்திதானமும் இல்லையே நான் தவறான சந்நிதானத்துக்கு சென்றுவிட்டேனா அல்லது வேறு சந்நிதானம் உள்ளதா என கேட்டேன். அவர் , அவரது கடையில் இருந்த நாட்காட்டியில் இருந்த நடனமாடும் நடராசரை காட்டி இப்படி பட்ட சிலை தான் உள்ளே உள்ளது என்றும், நான் பார்த்தது சரியான சந்நிதானம் தான் என்றும், அலங்காரம் செய்யப்பட்டிருப்பதால், முகம் மட்டுமே தெரிகிறது என்றும்  மற்ற பகுதிகள் மறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

நாங்கள் வெளியில் உட்கார்ந்து சாப்பிடும் போது, பூஜை செய்த பிரசாதங்கள் தூக்கு சட்டிகளில் தீட்சிதர்கள் எடுத்துகொண்டு  வேகமாக வெளியில் சென்றுகொண்டிருந்தனர்.

பக்தர்கள் யாருக்கும் கொடுக்காமல் அனைத்தையும் அவர்களே எடுத்துக்கொண்டு போவது அநியாயம். தினமும் இப்படி அவர்களுக்கு தேவையான உணவை பிரசாதம் என்ற பெயரில் சமைத்து, கடவுளுக்கு காட்டிவிட்டு, பக்தர்களுக்கு கொடுக்காமல் எடுத்து செல்வது தவறு. கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களை அங்கேயே பக்தர்களுக்கு கொடுத்து விட வேண்டும்.

இங்கு பூஜை செய்பவர்கள் அர்ச்சகர்களா அல்லது தீட்சிதர்களா ? இவர்கள் முன்குடுமி பக்கவாட்டில் வைத்திருந்தார்கள். ஒரு சிலரே வழக்கம் போல் பின்புறம் குடுமி வைத்திருந்தார்கள்.

சிதம்பர ரகசியம் என்ன என்று பார்க்கமுடியவில்லை. அவசரமாக புறப்பட வேண்டியிருந்ததால், வெளிப்பிரகாரத்தை சுற்றி வரமுடியவில்லை


No comments:

Post a Comment