Sunday 25 May 2014

இந்தியாவின் 15வது பிரதம மந்திரியின் பதவியேற்பு விழா



அமைதி                       அமைதி                         அமைதி

வருகின்ற 26ஆம் தேதி மே மாதம் 2014 வருடம் மாலை 06.00 மணிக்கு பாரத தேசத்தின் பிரதம மந்திரியாக
 
இன படுகொலையான்என்று ஆதாரமின்றி தூற்றப்படும் குஜராத் தேசத்தின் முதல் மந்திரியும்

அமெரிக்க தேசத்தின் ஆட்சியாளர்களால் புறக்கனிக்கப்பட்டவருமான
 
பாரத தேசத்தில் குஜராத் பிரதேசத்தை முதன்மை பிரதேசமாக மாற்றியவருமான
 
தேநீர் விற்பனையாளரும், பிரம்மசாரியும், ராஷ்டிரியா சுயம் சேவக்குமான
 
திரு. நரேந்திர மோதி அவர்களுக்கு முடிசூட்டு விழா நடைபெறுகிறது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்

                                                                





பாரத தேசத்தின் அதிபர் மான்புமிகு திரு. பிரனாப் முகர்ஜி முடிசூட்டு விழாவை முன்னின்று நடத்துகிறார்.

இவ்விழாவிக்கு அண்டை நாட்டு ஆட்சியாளர்கள் வருகை தந்து விழாவை சிறப்பிக்க உள்ளவர்கள்

1) என்றும் எப்போதும் தன் நாட்டு மக்களை பதட்டத்துடனே வாழ வைத்து கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் தேசத்து  அதிபர் திருல்.ஹமீத் கர்சாய்  (Hamid Karzai)

2) பாரத தேசம் பாக்கிஸ்தான் தேசத்தில் போர்தொடுத்து உருவாக்கிய புதிய தேசமான பங்களா தேசத்தின் பிரதம மந்திரி திருமதி. ஷேக் அசினா (Sheikh Hasina)

3) பூட்டான் தேசத்து மலை நாட்டு பிரதமர் திரு.டெசரின் டொப்கே ( Tshering Tobgay)

4) மலாய் தீவுகளின் அதிபர் திரு.அப்துல்லா யாமின் ( Abdulla Yameen )

5) அன்மையில் மன்னர் ஆட்சி முறை ஒழிந்து மக்களாட்சி முறை அமுல்படுத்தப்பட்ட நேபாளா நாட்டு பிரதமர் திரு. சுசில் கொய்ராலா ( Sushil Koirala) 

6) நாட்டு சுதந்திரத்துக்காக நம்மோடு இனைந்து போரடி வெற்றி பெற்று தனிநாடக பிரிந்து சென்று, அன்று முதல் இன்று வரை இம்சை தரும் பாக்கிஸ்தான் நாட்டு பிரதமர் திரு.நவாஸ் செரிப் ( Nawaz Sharif)

7) உள்ளங்கையளவு தீவு நாடு, சுதந்திரத்திற்க்காக போராடிய தமிழ் இன மக்களை ஒழித்து வெற்றி கண்ட இலங்கை அதிபர் திரு. மகேந்திர ராஜபக்சா ( Mahindra Rajapaksa )

ஆகியோர் இம் முடிசூட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வர இசைந்துள்ளனர்.

டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்


மேலும், பாரத தேசத்தின் முன்னாள் அதிபர்கள், பிரதமர்கள், மாநில ஆளுநர்கள் கலைஞர்கள் பங்கேற்க்க அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமருடன் பதவியேற்க உள்ள மற்ற மந்திரி பிரதானிகள், அவரது கட்சி அரசவை உறுப்பினர்கள், தோல்வியுற்ற கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள், வெற்றி பெற்ற தோல்வியுற்ற கூட்டனி கட்சி தலைவர்கள் அனைவரும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தனக்கு சம்சாரம் வேண்டாம் நாட்டுக்கு மின்சாரம் தான் வேண்டும் என்று தனது ஆட்சிக்கு உட்பட்ட குஜராத் பிரதேசத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கியவரும்.

வற்றாத ஜீவ நதி கங்கை வறன்டாலும், தன் பிரதேசத்தில் நீர் வற்றாமல் இருக்கும் படி தடுப்பனைகள் கட்டி நீர் வளம் மிகுந்த நாடாக மாற்றியவரும்

தான் சார்ந்த மதமே மகத்தானது என்ற கொள்கையுடன், இதிகாச புருசன் பெருமாளின் அவதாரம் ராமபிரானுக்கு கோயில் கட்டுவதையே கொள்கையாக கொண்டவரும்,

சுதந்திரத்துக்கு பிறகு சமஸ்தானங்களை இனைத்து பாரத தேசத்தை உருவாக்கிய திரு. வல்லபாய் பட்டேலுக்கு, உலகத்திலேயே பெரிய சிலையை உருவாக்க இரும்பை சேகரித்து வருபவரும்,

பாரத தேசத்தில் மக்கள் அனைவரும் சமம் என்று பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்ச்சிப்பவரும்

பெரும் செல்வந்தர்கள், வணிகர்கள், தொலைகாட்சி ஊடகங்களின் தொடர்விடா முயற்சியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும்,

இனைய தளங்களில் தொடர்ந்து புகழுரைக்க ஏற்பாடு செய்து, வாக்காளர்களை மூளைசலவை செய்து வெற்றி பெற்றவருமான
 
இவரால் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளையும் என்ற அச்சத்தை சிறுபான்மையினதிற்க்கு உருவாக்கியுள்ளவரும் ,

இன்னும் பல அரிய பெரிய சாதனைகளை படைத்தவரும், சாதனைகளை படைக்கி சூளுரைத்துள்ளவருமான

திரு. நரேந்திர மோடி அவர்களின் முடிசூட்டு விழாவை , பொதுமக்கள் அனைவரும் தம்தம் வீட்டு தொலைகாட்சியின் முன் அமர்ந்து , இவர் மூலம் நாட்டுக்கு விடியல் வரும் என்ற நம்பிக்கையுடன் நேரடி ஒளிப்பரப்பை கண்டு களிக்குமாறு ஆணையிடப்படுகிறது.

இவ்விழாவை புறக்கணிக்கும் சிறு பிரதேசத்தை ஆளும் முதல்வர்களும்,  விருந்தினர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டும் , பதவிக்கு கூட்டணி சேர்ந்தவர்களுக்கும் தற்காலிகமாக முடிசூட்டு விழாவை முன்னிட்டு  பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.



No comments:

Post a Comment