Monday 19 May 2014

பெண்ணை கேலி செய்தால் வாய் உடைக்கப்படும்



மதுரையில் சௌராஷ்ட்ர பெண்களை கேலி செய்த
>>
அன்னஜாத் << பையன் வாயை உடைத்த சௌராஷ்ட்ர இளைஞர் தெருமுழுவதும் திடிர் பரபரப்பு !
தப்பி ஓடிய அன்னஜாத் பையன் !!!

இந்த செய்தியின் பின்னனி என்ன ?
நமது சமூக பெண்ணை வேறு சமூக பையன் கேலி செய்தது தவறு. அதற்கு நமது சமூக இளைஞர் தண்டனை கொடுத்தார் என்பது பெருமையான செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது
நமது சமூக பெண்ணை வேறு சமூக பையன் கேலி செய்தால் இப்படி தான் தண்டிக்க வேண்டும் என்ற செய்தியை பரப்புவது நோக்கமா ?
கேலி செய்த பையன் பெண்ணின் சமூகத்தை பார்த்து தான் கேலி செய்கிறானா அல்லது கண்ணில் படும் பெண்ணை எல்லாம் கேலி செய்கிறானா ?
இந்த பெண்ணை நமது சமூக பையன்  கேலி செய்தால் இதே தண்டனை தான் கொடுப்பார்களா அல்லது இப்படி செய்யாதே என்று கூறி மன்னிப்பார்களா ?
ஒருவேளை நமது சமூக பையன் வேறு சமூக பெண்ணை கேலி செய்து இது போன்ற தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டால் அப்போது பொறுத்து போவாமா அல்லது ஏன் அடித்தாய் என்று சண்டைக்கு போவோமா ?
இப்படி ஒரு நிகழ்ச்சி நமது சமூக பெண்ணுக்கு ஏற்படாமல், இரு வேறு சமூக ஆண் பெண்ணுக்கு இடையில் ஏற்ப்பட்டிருந்தால், இரண்டு ஜாதியையும் குறிப்பிட்டு செய்தி வெளியிடுவாரா அல்லது இது ஒரு சாதாரன நிகழ்ச்சி என்று செய்தி வெளியிடாமல் இருந்திருப்பாரா ?
செய்தி வெளியிட்டதன் நோக்கம் பெண்ணை ஆண் கேலி செய்ய கூடாது என்பதா அல்லது நமது சமூக பெண்ணை வேறு சமூக ஆண் கேலி செய்ய கூடாது என்பதா ?
செய்தியை வெளியிடும் போது உணர்ச்சிகளை தட்டி எழுப்பி அதன் மூலம் பிரச்சனையை பெரிதுபடுத்துவது , இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்ப்படுத்துவது சரியா.
அடி வாங்கிய இளைஞர் அவரது நண்பர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து தாக்கியவரை அவர்கள் தாக்க வாய்பிருக்கிறது.
இந்த இடத்தில் அந்த இளைஞர் அந்த பெண் இருவரும் ஒரே மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் வேறு சமூகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே வேறு மதத்தை சார்ந்தவராக இருந்தால் மத கலவரம் ஏற்ப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணும் , செய்தி வெளியிட்டவரும் பதுங்கி கொள்வார்கள். மக்கள் அடித்து கொண்டு சாவர்கள்.
இப்படி பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதால் தான் நாட்டில் ஜாதி கலவரங்களும் மத கலவரங்களும் நடைப்பெறுகிறது.
நான் இப்படி எழுதுவதால், நமது சமூக பெண்கள் துன்பத்திற்க்கு ஆளாகும் போது எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா, நமது சமுக பெண்கள் பாதிக்கப்படுவார்களே என்று கேள்வி எழுப்புவார்கள். நமது சமூக பெண்கள் பாதிக்கப்படும் போது,  சும்மா இருக்கவேண்டும் என்று கூறவில்லை. சம்பவம் சரியா நடந்ததா அல்லது தவறா என்பது பிரச்சனையல்ல. அதை சமூகம் குறிப்பிட்டு செய்தியாக்கியது தான் தவறு.
எல்லோரும் ஊடகங்கள் உட்பட இப்படி தானே செய்திகள் வெளியிடுகின்றன அவர்களை கண்டிக்காமல் இந்த செய்தியை மட்டும் கண்டிப்பது ஏன் என்று கேள்வியை எழுப்பகூடும். நமது சமூகத்திற்க்கு நமது சமூக மக்களே எதிராக கருத்து தெரிவிப்பதாகவும் வாதட கூடும். யாராக இருந்தாலும் ஜாதி, மதம் பற்றி குறிப்பிட்டு செய்தி வெளியிட கூடாது என்பது தான் எனது நிலை.
முகநூலில் பதிவு இட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவசரப்பட்டு இப்படி செய்தி வெளியிட்டு விட்டார் என நினைக்கிறேன். செய்தி வெளியிட வேண்டுமென்றால் பொதுப்படையாக “ பெண்ணை கேலி செய்த இளைஞரை பொது மக்கள் தண்டித்தனர் “ என்று செய்தி வெளியிடவேண்டும்.

No comments:

Post a Comment