Tuesday 20 May 2014

ஔவையாரும் - முதிரா முதுமையும் - progeria



ஔவையார் ஒரு சங்க கால புலவர். அவரை பற்றி கூறும் கதைகளில் ஒன்று அவரது தோற்றத்தை பற்றியது. அவர் இளம் வயதிலேயே விநாயக பெருமானை வேண்டி முதுமை கோலத்தை பெற்றார் என்பது. அவர் எதற்காக அந்த முதுமையை வரமாக பெற்றார் என்பதற்கு எந்த காரணமும் இதுவரை சொல்லப்படவில்லை

ஔவையார் என்ற பெயரில் பலர் இருந்துள்ளனர். அனைவருமே புலவர்கள் என்று கூறப்படுகிறது. இளமையிலேயே எந்த காலத்து புலவர் இந்த முதுமை கோலத்தை விரும்பி பெற்றார் என தெரியவில்லை. அந்த ஔவையாரின் பிறப்பு, ஊர், தாய் தந்தை மற்றும் இறப்பு பற்றிய செய்திகள் எதுவும் தெரியவில்லை.

விநாயக பெருமானை வேண்டி முதுமை கோலம் பெற வேண்டிய காரணம் என்ன ? இந்த காலத்தை போல பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு அதிலிருந்து தன்னை காத்து கொள்ள இது போன்று வரம் பெற்றாரா என தெரியவில்லை.

இன்றைய அறிவியல் படி, Progeria  ( முதிரா முதுமை ) என்ற நோய் 1886 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ( PAA என்கிற இந்தி படத்தில் இந்த நோய் உள்ளவராக திரு. அமிதாப்பச்சன் நடித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ) அதாவது மிக இளம் வயதிலேயே மிக முதிர்ந்த தோற்றத்தை பெற்றுவிடுவார்கள். 10 வயது குழந்தை 50 வயது உடையவருடைய தோற்றத்தை பெற்றுவிடுவார்கள். இந்த நோய்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

ஔவையார் என்கிற புலவருக்கும்  இந்த வகை நோய் தாக்கப்பட்டிருக்கலாம். ஔவையாரை பெற்றவர்களுக்கு இது நோய் என தெரியாமல் இருந்திருக்கலாம். அப்படியே தெரிந்திருந்தாலும், அன்றைய சமூகம் அவளை வாழ விடாது என்ற காரணத்தால், அவள் விநாயகரை வேண்டி வரம் பெற்றாள் என்று கூறி சமூகத்திடம் மறைத்திருப்பார்கள்.

இது போன்ற நிலையில் சாதாரணமாக பெண்கள் வாழும் வாழ்க்கையை வாழ முடியாத நிலையில், பாடல்களை பாடி தனது வாழ்க்கையை வாழ நேர்ந்திருக்கும். 

மற்றவர்களுக்கு இது நோய் என்று தெரியாவிட்டாலும், நிச்சியமாக இது நோய் என்று ஔவையாருக்கு தெரிந்துள்ளது.

அவரது நண்பரும் அரசருமான அதியமான் அவர்களுக்கு அவர் நெல்லிகனி கொடுத்தது பற்றி ஒரு கதை இருக்கிறது.

நெல்லிகாய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என்பதும் சரும நோய்கள் நெருங்காது என்பதும், கண் பார்வை சரியாக இருக்க உதவுகிறது என்பதும் மேலும் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது என்று இன்றைய அறிவியல் நமக்கு சொல்லி தருகிறது.

இதை ஔவையார் அந்த காலத்திலேயே அறிந்திருக்கிறார். அதை அவர் உபயோகித்து பார்த்திருக்கலாம். அவருடைய நெருங்கிய நண்பரும் அரசருமான அதியமானுக்கு தனக்கு வந்திருக்கும் நோய் வந்து விடக்கூடாது என்பதற்க்காக , அவர் எப்போதும் இளமையுடன் நல்ல ஆரோகியத்துடன் வாழ வேண்டும் என்பதற்க்காக நெல்லி கனிகளை அவருக்கு தொடர்ந்து கொடுத்திருக்கலாம்.

மா, பலா , வாழை மற்றும் பல கனிகள் இருக்கும் போது, மிகவும் சிறியதும் சற்று துவர்ப்பு சுவை உள்ள நெல்லிகனியை கொடுக்க வேண்டிய காரணம் , அவருக்கு ஏற்ப்பட்ட நோய் அரசருக்கு ஏற்ப்பட்டு விடக்கூடாது என்ற முன் எச்சரிக்கை காரணமாக கொடுத்திருக்கலாம்.

ஔவையாரை பற்றி கூறப்படும் இரண்டு கதைகளும், நோயும் அதன் மருத்துவம் பற்றியதாக அமைந்திருக்கிறது.

காலப்போக்கில் எல்லாவற்றிலும் இடைசெருகல் ஏற்ப்படுவது போல ஔவையாரின் வாழ்க்கை வரலாற்றிலும் ஏற்ப்பட்டு அதை கடவுள் பக்தியுடன் இனைத்ததுடன், அண் பெண் நட்பை தவறாக புரிந்து கொள்ளகூடாது என்பதற்க்காக இது போன்ற செய்திகளை ஏற்ப்படுத்தியிருக்கலாம்.




No comments:

Post a Comment