Saturday 24 May 2014

இந்தியா பாக்கிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை



பாக்கிஸ்தான் பிரதமர் திரு.நவாஸ் செரிப்,  திரு.நரேந்திர மோடியின் பதிவியேற்பு விழாவுக்காக டெல்லி வர சம்மதித்துள்ளார்.


இது குறித்து பாரதிய ஜனதா கட்சியினர் கருத்து தெரிவிக்கையில், இந்த வருகை “ அமைதிக்கான முதல்படி  “ FIREST STEP TOWARDS PEACE என்று குறிப்பிடுகின்றனர். இதே கருத்தை மோடி ஆதரவு தேசிய தொலைகாட்சிகளும், பி.ஜே.பி. ஆதரவாளர்களும் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினரும் கடந்த காலத்தில் இப்படி தான் கூறினார்கள்
             
இந்தியா பாக்கிஸ்தான் சுதந்திரமடைந்த நாளிலிருந்து பிரச்சனை இருக்கிறது. போர்களும் பேச்சு வார்த்தைகளும் கடந்த 60 ஆண்டு காலமாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இந்திய பிரதமர் பாக்கிஸ்தான் சென்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். பாக்கிஸ்தான் பிரதமர் இந்தியா வந்து பேச்சு வார்த்தை நடத்துகிறார் சில சமயங்களில் இருநாட்டு பிரதமர்களும் வெளிநாடுகளில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.


எப்போது பேச்சு வார்த்தை நடத்தினாலும் , இது அமைதிக்கான முதல் படி – FIRST STEP TOWARDS PEACE என்று கூறுகின்றனர். . எப்போது அமைதிக்கான இரண்டாவது படி. – SECOND STEP TOWRAFDS PEACE  என்று கூறுவார்கள்.


இருநாட்டுக்கும் பிரச்சனைகள் தீர்ந்து அமைதியை அடைய எத்தனை படிகள் கடக்க வேண்டும் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் முதல் படியிலிருந்து இரண்டாவது படிக்காவது முன்னேறுங்கள்.

கடைசி படியை கடந்து கதவை திறந்து, புதிய இடத்திற்க்கு செல்வோமா அல்லது கதவை திறந்த பிறகு அங்கு வெற்றிடமிருந்து கீழே விழுவோமா என தெரியவில்லை.


எனவே பேச்சு வார்த்தையின் மூலம் எந்த விதமான பாதுகாப்பான இடத்திற்க்கு செல்கிறோம் என்று முடிவு செய்துகொண்டு, அதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி ஒவ்வொரு படியாக முன்னேறி செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் முதல்படி என்று சொல்லிக் கொண்டிருக்க கூடாது.

போர்களை நடத்தி அதன் மூலம் அமைதியை நிலைநாட்டியதாக கூறி, நோபல் பரிசு வாங்கிகொண்டவர்கள் உண்டு. நமக்கு அந்த பரிசு வேண்டாம். இருநாட்டுக்கு இடையே அமைதி ஏற்ப்பட்டு, சுமுகமான உறவுகள் ஏற்பட்டாலே போதுமானது.

No comments:

Post a Comment