Wednesday 28 May 2014

அமைச்சர்கள்



முக்கிய மந்திரிகள் – (Cabinet Minister)


முக்கிய துறைகளை கவனிக்க நியமிக்கப்படுபவர்கள் கேபினட் மந்திரி என அழைக்கப்படுவார். பொதுவாது, உள்துறை அமைச்சகம் (Home Ministery) , வெளியுறவு துறை அமைச்சகம் (External Affairs Ministry, எண்ணை வள துறை ( Petroleum Ministry) கல்வி (Education Ministry ) நல்வாழ்வு (Welfare Ministry ) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் (Science and Technology ) சுகாதாரம் (Welfare), பாதுகாப்பு அமைச்சகம் (Defence Ministry) சட்டம் மற்றும் நீதிதுறை(Law & Justice) மற்றும் பல.

இவைகள் சிறிய துறைகளாக இருந்தால் கேபினட் அமைச்சர்கள் மட்டுமே இருப்பார்கள்.

பல சமயங்களில் முக்கிய முடிவுகளை பிரதமர் எடுக்கும் போது மந்திரிசபையை கலந்தாலோசிப்பார். மந்திரி சபையில் கேபினட் அமைச்சர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்.

இணை அமைச்சர் - Minister of State

முக்கிய துறைகளில் கேபினட் அமைச்சர் நியமிக்கப்பட்டாலும், அந்த துறை பெரிதாக இருந்தால் ,அல்லது இரண்டு துறைக்கு சேர்த்து ஒரு கேபினட் அமைச்சர் நியமிக்கப்பட்டால் கேபினட் அமைச்சருக்கு உதவி செய்ய ஒரு துணை அமைச்சர் நியமிக்கப்படுவார். இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட துறை சார்ந்து எடுக்கும் எல்லா முடிவுகளையும் செய்த வேலைகளையும் கேபினட் அமைச்சருக்கு தெரியப்படுத்த வேண்டும்

இணை அமைச்சர்தனிதுறை (Minister of State-Independent)

கேபினட் அமைச்சர் நியமிக்கப்படாத சிறிய துறைகளுக்கு நியமிக்கப்படும் அமைச்சருகளுக்கு Minister of State – Independent Charge என்று பெயர். இவர் அவரது துறையை தனியாக நிர்வாகிப்பார். எந்த அமைச்சருக்கும் கீழ் இவர் வேலை செய்ய மாட்டார். பிரதமரின் நேரடி பார்வையில் இருப்பார்.


மொத்தமுள்ள மக்களவை உறுப்பினர்களில் , பாதி அல்லது பாதிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ள கட்சி ஆட்சி அமைக்கலாம். எந்த கட்சிக்கும் போதிய பலம் இல்லையெனில் மற்ற கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்

ஆட்சி அமைக்கும் கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் மற்ற அமைச்சர்களை நியமிப்பார். எப்போது வேண்டுமானலும், புதிய அமைச்சர்களை நியமிக்கவும், மற்ற அமைச்சர்களின் துறைகளை மாற்றவும் அல்லது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றவர்.

அமைச்சராக நியமிக்கப்படுவதற்க்கு எந்த கல்வி தகுதியோ , துறை சார்ந்த அனுபவமோ வயது வரம்போ தேவையில்லை

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர் , பொது தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கவேண்டும் அல்லது குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினராக இருக்க வேண்டும்.

மேற் கூறிய தகுதி இல்லாத ஒருவரும் பிரதமராகவோ அல்லது அமைச்சராகவோ நியமிக்கப்படலாம். இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் , அடுத்த ஆறு மாதங்களில் மக்களவை உறுப்பினராகவோ அல்லது ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment