Tuesday 20 May 2014

தேர்தலும் சுயேட்சை வேட்பாளரும்



2014 ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் , தென் சென்னை நாடளுமன்ற தொகுதியில் சௌராஷ்ட்ரா சமூகத்தை சார்ந்த திரு. குப்பல் தேவதாஸ் அவர்கள் சுயேட்சை உறுப்பினராக தேர்தலில் போட்டியிட்டார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 514

தேர்தலுக்கு முன்பு சௌராஷ்ட்ரா சமூகத்தை சார்ந்த யாருக்கும் எந்த கட்சியும் தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற வருத்தத்தை பலரும் வெளிப்படுத்தினார்கள்.

எல்லா கட்சிகளும் ஜாதி அடிப்படையில் தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கிறது. எந்த தொகுதியில் அதிக ஜாதி மக்கள் இருக்கின்றனரோ அந்த ஜாதியை சேர்ந்தவரை, வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் அதிக வாக்குகளை பெறலாம் என நினைக்கின்றனர். எல்லா கட்சிகளும் அந்த தொகுதியில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால், அந்த ஜாதியை சார்ந்த ஒட்டுக்கள் எல்லா கட்சிகளும் பிரிந்து விடுகின்றன. அந்த சூழ்நிலையில், குறிப்பிட்ட ஜாதியை சாராதவர்கள், கட்சி அடிப்படையில் யாருக்கு வாக்கு பதிவு செய்கிறார்களோ அவரே வெற்றி பெறுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜாதி அடிப்படையில் வேட்பாளரை நிறுத்தினால், அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்று விடுவார் என்று என்று எல்லா கட்சிகளும் நினைப்பது தவறான முடிவு.

மதுரையில் சௌராஷ்ட்ரா சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகம் பேர் இருப்பதால், அந்த சமூகத்தை சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில், சமூகத்தை சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என முயற்சி செய்தனர்.

சௌராஷ்ட்ரா சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகம் பேர் இருந்தாலும், இந்த சமூகத்தை பொறுத்தவரை அவர்கள் எல்லோரும் ஜாதி அடிப்படையில் வாக்களிப்பதில்லை. அவர்கள் கட்சி அடிப்படையிலேயே வாக்களிக்கின்றனர். 

மேலும், இந்த சமூகத்தை சார்ந்த மக்கள் அரசியலில் ஆர்வம் காட்டினாலும், அனைத்து சமூக மக்களிடமும் ஒருங்கினைந்து பழகுவதில்லை. சிறிய குழு போன்றே பழகுவதாக தோன்றுகிறது. 

பேசும் மொழியால் வெளிப்படையாக வேறுபடுவதால் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழியால் வேறுப்படுவதால் , இவர் நம்மை சார்ந்தவர் அல்ல என்ற உணர்வு அந்த மக்களுக்கு ஏற்ப்படுகிறது. இதுவும் அவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கும் , வாய்ப்பு கிடைத்தாலும் வெற்றி பெற முடியாமல் போவதற்கும் காரணமாக அமைகிறது..

தேர்தலை குறி வைத்து வேலை செய்வதை விட , ஏதேனும் கட்சியில் இருந்து கொண்டு தொடர்ந்து மக்கள் பார்வையில்  இருக்கும் படி காரியங்களை செய்து கொண்டிருந்தால், கட்சிகளும் மக்களும் இவர்களுக்கு வாய்பளிப்பார்கள்.

எப்போதும் மக்கள் பிரச்சனையில் பங்கெடுக்கும் கம்யுனிஸ்ட் கட்சியை போல தொடர்ந்து செயல்பட வேண்டும்.

இந்த தேர்தலில்  வெற்றி பெற்றுள்ள கட்சியை தவிர வேறு கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடிருந்தால், படு தோல்வியை சந்தித்திருப்பார்கள். மிகுந்த பணமும் செலவு செய்து தோல்வியை தழுவியிருப்பார்கள்.

2016 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போதிருந்த மக்கள் கவனத்தையும் கட்சிகளின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு பணமும், தொண்டர் படையும் தைரியமும் தேவை. மேலும், அனைத்து சமூக மக்களிடமும் சகஜமாக பழக வேண்டும்.


No comments:

Post a Comment