Thursday 22 May 2014

மனைவியின் கற்பு நிலையை எப்படி அறிவது.



மனைவியின்  கற்பு நிலையை எப்படி அறிவது.

மனைவியை கிணற்றில் நீர் இறைக்க சொல்லி அதன் மூலம் கற்பு நிலையை அறிவது எளிதா நம்பகதன்மை கொண்டதா அல்லது இன்றைய அறிவியல் படி ஆராய்ந்து அறிவது நம்பகதன்மை கொண்டதா. ?

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு,  கிணற்றில் நீர் இறைக்கும் போது நடந்த நிகழ்சி மூலம் மனைவியின் கற்பு நீருபிக்கப்பட்டதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது.

அப்படி கற்பு நிலை அறியப்பட்ட மனைவி யார். ? நமது அய்யன், உலக பொதுமறை அருளிய திருவள்ளுவர் .

ஒருமுறை திருவள்ளுவரின் மனைவி வாசுகி கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருக்கும் போது, ஐயன் வள்ளுவர் வீட்டின் உள்ளிருந்து வாசுகியை அழைத்தாரம். கணவன் அழைத்தவுடன், இதோ வந்து விட்டேன் என்று நீர் இறைப்பதை அப்படியே விட்டு விட்டு ஐயன் வள்ளுவனிடம் சென்று அவருக்கு சேவை செய்தாரம்.

சேவை செய்துவிட்டு வந்து கிணற்றடியில் பார்த்தால், அவர் நீர் இறைக்கும்போது அப்படியே விட்டு விட்டு வந்ததால், கயிற்றில் கட்டியிருந்த குடம் கிணற்றில் தொங்கி கொண்டிருந்ததாம். வாசுகி கற்பு நெறி தவறாத பெண் என்பதால் தான், குடம் கிணற்றில் விழாமல் அந்தரத்தில் தொங்கிகொண்டிருந்த்தாக எழுதி வைத்துள்ளனர்.

மக்களே, இதை படிக்கும் பலரும் கிணற்றில் நீர் இறைத்திருப்பீர்கள். கயிற்றில் கட்டியிருக்கும் குடத்தை கிணற்றுக்குள் வேகமாக விடும் போது, குடத்தை வேகமாக மேலே இழுக்கும் போதும், கயிறு ராட்டிணத்தின் பக்க வாட்டில் மாட்டிக்கொள்ளும். நாம் அப்படியே விட்டு விட்டால், அது கீழேயும் போகாது. மேலேயும் வராது. கயிறு நம் கையிலிருந்து நழுவினால், குடம் வேகமாக கீழிறங்கும் போது, கயிறு ராட்டினத்தின் பக்கவாட்டில் மாட்டிக்கொண்டு, குடம் பாதியில் நின்று அந்தரத்தில் தொங்கும்.

இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். ஆண் பெண் குழந்தை என்று வித்தியாசம் இல்லாமல் இது போன்ற சமயங்களில் கயிறு ராட்டினத்தின் பக்கவாட்டில் மாட்டிக்கொண்டு குடம் அந்தரத்தில் தொங்கும். ஊர் அறிந்த வேசி கிணற்றில் நீர் இறைத்தாலும் இது தான் நடக்கும்.

கயிற்றை யாருடைய மனைவி விட்டுவிட்டாலும், கயிறு ராட்டினத்தில் மாட்டிக்கொண்டு அந்தரத்தில் தொங்கதான் செய்யும். இதற்கும் மனைவியின் கற்பு நிலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இப்படி ஒரு சம்பவத்தை கற்பனை செய்து எழுதி வைத்து, வள்ளுவன் மனைவி வாசுகி கற்புடையவள் என்று கூறியதன் மூலம் , வள்ளுவனையும் அவரது மனைவியையும் கேவலப்படுத்தியுள்ளனர்.


1 comment:

  1. அது என்னது? பெய்யெனப் பெய்யும் மழை !

    ReplyDelete