Sunday 25 May 2014

தமிழக மீனவர் பிரச்சனை



2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், பி.ஜே.பி. சில இடங்களை வெல்ல முடியும்.

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுவதும், சில சமயங்களில் சுட்டுக்கொல்லப்படுவதும் செய்திகளாக பார்க்க நேரிடுகிறது.


நேற்று நீர்பறவை திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. இந்த பிரச்சனை குறித்து படத்தில் பேசப்பட்டுள்ளது. மனதை பாதித்தது.


எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்பது இலங்கை அரசின் வாதம். தமிழ்நாட்டில் எல்லை பிரச்சனை பற்றி பேசாமல் , மீனவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று தான் பேசப்படுகிறது. எல்லை எது என்பதும் பிரச்சனையாக்கப்படுகிறது.



சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் எப்படியும் ஒரு மாத காலத்தில் விடுதலை செய்யப்படுகிறார்கள். படகுகளும் பொதுவாக திருப்பி தரப்படுகிறது.


சுட்டு கொல்லும் நிகழ்ச்சி ஏன் நடைப்பெறுகிறது என தெரியவில்லை. காரணம் எதுவாது இருந்தாலும் தவிர்க்கப்பட வேண்டும்.


தமிழக மீனவர்கள் என்பதால் தான் இந்திய அரசு கண்டுகொள்வதில்லை எனறும் , தமிழர்களையும் தமிழ்நாட்டையும் இந்தியா புறக்கணிக்கிறது என்றும் எப்போதும் பேசப்படுகிறது. மற்ற மாநில மீனவர்கள் கைது செய்யப்பட்டால் இந்திய அரசு இப்படி தான் நடந்து கொள்ளுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.


மூன்று கேரள மீனவர்களை சுட்டு கொன்றதற்க்காக , கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியவுடன் இத்தாலிய கப்பல் அதிகாரியளை கைது செய்து வழக்கு தொடரப்பட்டது என்றும் ஆனால் தொடர்ந்து துன்பம் தரும் இலங்கை அரசுடன் அப்படி நடந்து கொள்வதில்லை என்றும் விவாதிக்கப்படுகிறது.


இத்தாலிய கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீனவர்களை சுட்டுக்கொன்றது. இத்தாலிய கப்பல் இந்திய எல்லைக்குள் இருக்கும் போது கைது செய்யப்பட்டது.


ஆனால், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் இருக்கும் போது  இலங்கை ராணுவம் அவர்கள் எல்லைக்குள் இருந்து கொண்டு சுடுகிறது அல்லது சிறைபிடிக்கிறது. இரண்டும் ஒன்றல்ல. நிறைய வித்தியாசம் உள்ளது.


மோடியின் பதவியேற்ப்பு விழாவுக்கு வரும் பாக்கிஸ்தான் பிரதமர் திரு. நவாஸ் செரிப் 151 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய உத்திரவிட்டுள்ளாதாக செய்தி வெளியாகி உள்ளது. இவர்கள் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள். பாக்கிஸ்தான் அரசு சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 337 மீனவர்கள் விடுதலை செய்துள்ளது.. சென்ற ஆண்டு தீபாவளி சமயத்தில் 15 மீனவர்கள் விடுதலை செய்துள்ளது.


இந்திய மீனவ செயல்பாட்டாளர்கள் கணக்குப்படி, 229 மீனவர்களும் 780 படகுகளும் பாக்கிஸ்தான் வசம் உள்ளதாகவும், அதே போல 200 பாக்கிஸ்தான் மீனவர்களும் 150 படகுகளும் இந்திய அரசு வசம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.


இவர்கள் அனைவரும் கடல் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த காரணத்தால் கைது செய்யப்பட்டவர்கள். இந்திய பாக்கிஸ்தான் அரசுகள் மீனவர்களை கடலில் சுட்டு கொன்றுள்ளாதா என தகவல்கள் தெரிவிக்கவில்லை.


இந்தியா பாக்கிஸ்தான் உறவு எதிரி நாடுகளுக்கிடையே உள்ள உறவு போன்றது. இப்படி கடல் எல்லை தாண்டும் மீனவர்கள் உண்மையிலேயே மீனவர்கள் தானா அல்லது இரு நாட்டு அரசுகளும் அனுப்பி வைக்கும் உளவாளிகளா என்று நிச்சியமாக சொல்ல முடியாது. தீவிரவாதிகள் கூட மீனவர்கள் போன்று உள்ளே வர வாய்ப்புக்கள் உள்ளது.


எனவே, இருநாடுகளும் மீனவர்களை கைது செய்யபடுவதை  பெரிய பிரச்சனையாக்கப்படவில்லை. அல்லது நமது பார்வைக்கு வரவில்லை.
இந்தியா வரும் இலங்கை பிரதமரிடம் நரேந்திர மோடி மீனவர் பிரச்சனை குறித்து பேச வேண்டும். இருநாட்டு மீனவர்களுகிடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் அரசு முக்கிய பங்கு வகித்து சுமூக தீர்வு காண வேண்டும். கடல் எல்லை பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் வரை, இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.


இப்படி செய்தால், தமிழக மக்களிடையே நல்லெண்ணத்தை பெறுவதுடன், வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சில இடங்களில் வெற்றி பெற வாய்ப்பாக அமையும்.




No comments:

Post a Comment