Friday 23 May 2014

சாதி இரண்டொழிய / மூன்றொழிய வேறில்லை



சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.   _    நல்வழி,ஔவையார்

மேலே கூறியுள்ள பாடலில் ஔவையார் குறிப்பிடுவது என்ன ? மனித இனம் , ஆண் இனம் - ஆண்பால் மற்றும் பெண் இனம் – பெண்பால் என்று மட்டும் தான் இயற்கையில் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் தாங்கள் செய்யும் தொழிலின் மூலம் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பெயரை ஏற்ப்படுத்தி,(ஜாதி பெயர் ) அதில் உயர்வு தாழ்வு ஏற்ப்படுத்தி பலவித இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவை நீக்கப்பட வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிறருக்கு உதவி செய்து வாழ்பவர் உயர்ந்த குலத்தை சார்ந்தவர் என்றும் மற்றவர்கள் இழிகுலத்தார் என்றும் சாடுகிறார்.

மக்களுக்கு போதனை செய்து நல்வழிபடுத்தும் வகையில் பாடல்களை பாடிய இவரும் மற்ற பலரும் ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இருப்பவர்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் , சான்றோர்கள் எனப்பட்டவர்களாலும் புறக்கனிக்கப்பட்டுள்ளனர்.

புறக்கணிக்கப்பட்ட இவர்கள் யார் ? இவர்கள் மனித உடலை தவிர்த்து வேறு வடிவில் உலா வருபவர்கள் அல்ல. அவர்களும் மனித உடலை பெற்று வாழ்பவர்கள் தான். ஏன் அவர்கள் அனைத்து காலங்களிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தான் ஆணா, பெண்ணா, இரண்டுமா அல்லது இரண்டுமாக இல்லாதவர்களா என அறிய முடியாத வகையில் உடல் அமைப்பையும், பிறப்புறுப்புகளையும் பெற்றவர்கள். 

இவர்களை தற்போது மூன்றாம் பாலினமாக இந்திய உச்ச நீதிமன்றம் ஆங்கிகரித்துள்ளது. அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆண் ஓரினசேர்க்கையாளர்களுக்கும், பெண் ஓரினசேர்க்கையாளர்களுக்கும் மற்றும் இருபாலருடனும் உடலுறவு வைத்து கொள்பவர்களுக்கு பொருந்தாது.

இந்த தீர்ப்புக்கு பிறகு மனித இனம் ஆண்பால், பெண்பால் மற்றும் மூன்றாம்பால் என பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஔவையார் கூறிய “ சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் என்ற பாடல் பொருத்தமானதா ? அது திருத்தப்பட வேண்டுமா என்பது எனது கேள்வி. திருத்தப்பட்டால் பாடலை எவ்வாறு பாட வேண்டும்.

சாதி மூன்றொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.   _    நல்வழி,ஔவையார்



No comments:

Post a Comment