Wednesday 28 May 2014

கவிச்சக்கரவர்த்தி கம்பர் சௌராஷ்ட்டிரர்



கவிச்சக்கரவர்த்தி கம்பனை பற்றிய ஆதாரபூர்வமான செய்திகள் இல்லையென்பதால், பலரும் அவரது வாழ்க்கை வரலாற்றை பல்வேறு விதமாக எழுதுகின்றனர்.

அவர் நாதஸ்வரம் வாசிக்கும் தொழிலை செய்யும் குடும்பத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. அவர் அந்த தொழிலை செய்தார் என்றோ அல்லது வேறு தொழிலை செய்தார் என்றோ எங்கும் யாரும் குறிப்பிடவில்லை

தமிழ் மொழியையும் சமஸ்கிருத மொழியையும் கற்று ஆறிந்து, வால்மீகி முனிவர் சமஸ்கிருத மொழியில் எழுதிய ராமயணத்தை தழுவி இவர் தமிழில் ராமாயணம் எழுதியதாக கூறப்படுகிறது. அதுவே கம்பராமாயணம் எனப்படுகிறது.

வால்மீகி எழுதிய மூல பிரதி ராமாயணம் கம்பருக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. செவி வழி மூலமாக அவர் அறிந்திருக்ககூடும். இது போன்று செவிவழியாக ராமயணத்தை அறிந்த ஒருவர் சமஸ்கிருத மொழியிலோ அல்லது தமிழ் மொழியிலோ ஒலைச்சுவடியில் எழுதி வைத்திருக்க வேண்டும். இவர் சமஸ்கிருத மொழியை கற்கும் போது அந்த மொழியில் எழுதப்பட்டிருந்த ராமாயணம் அவருக்கு அறிமுகம் ஆயிருக்கவேண்டும். அதன் பால் கவரப்பட்டு, தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல திருத்தங்கள் செய்து தமிழில் கற்பனை வளத்துடன் சுவையான உவமைகளுடன் எழுதியுள்ளார் என தோன்றுகிறது.

கம்பர் தமிழ்நாட்டில் பிறக்காதவராக இருந்து இன்றைய வட இந்தியா என்று கூறப்படும் பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் பிறந்து சமஸ்கிருத மொழியில் கல்வி பயின்றவராகவும் இருக்கலாம். பின்பு அவர் இடம் பெயர்ந்து தமிழ்நாடுக்கு வந்து , தமிழை பயின்று, தான் சமஸ்கிருதத்தில் பயின்ற ராமாயணத்தை தமிழில் எழுதியிருக்கலாம்.

இவரை பற்றி கூறப்படும் எந்த செய்திக்கும் யாரிடமும் ஆதாரமில்லை.

நெசவு தொழில் செய்ய உபயோகப்படுத்தப்படும் கருவிக்கு தறி என்றும் கட்டுத்தறி என்றும் பெயர் . அதுவே இந்நாளில் கைத்தறி என்றும் மருவியிருக்கலாம் என தோன்றுகிறது.

தறியில் ஆடை நெய்யும் போது ஒரே சீரான ஒலி எழுந்து கொண்டேயிருக்கும். பொதுவாக அதை ஒரு சத்தம் அல்லது இரைச்சல் என்ற அளவிலேயே அதிகம் பேசப்படுகிறது.

நெசவாளி அமைதியாக மிக ரசனையுடன் ஆடை நெய்யும் போது, அதிலிருந்து எழும் ஒலி ஒரு கவிதை போல இருக்கும் என்பதை அவர் மட்டுமே உணரமுடியும். அந்த கட்டுதறியே கவிதை படுவது போல இருக்கும்.

நாதஸ்வரம் வாசிக்கும் குடும்பத்தில் பிறந்தவர் அந்த தொழிலை செய்திருக்க வேண்டும் அல்லது கவிதை எழுதி , அரசரின் உதவி பெற்று புலவராக வாழ்ந்திருக்க வேண்டும். 

“ கம்பன் வீட்டு கட்டு தறியும் கவிபாடும் “ என்ற சொல் வழக்கு உள்ளது. இது எப்படி உருவாகியிருக்கும்.

கம்பன் வீட்டுல் கட்டுதறி எங்கிருந்து வந்தது. கட்டுதறியில் நெசவு வேலை செய்தது யார். அவரது மனைவி, மகன் போன்ற உறவுகளை பற்றி எங்கும் யாரும் குறிப்பிடவில்லை காரணம் அப்படியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

எனவே கம்பன் வீட்டில் கட்டு தறி இருந்திருக்கிறது என்பதும் அதில் அவர் நெசவு செய்தார் என்பது இந்த சொல்வழக்கு மூலம் உறுதியாகிறது. நெசவு செய்யும் போது எழும் ஒலி கவிதை போல இருந்திருக்கிறது.

கம்பனை போலவே அவர் வீட்டு கட்டுதறியும்  கவிதை பாடுகிறது என்ற பொருளில் “ கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும் “ என்ற சொல்வழக்கு உருவாகியுள்ளது.

இவர் நெசவு தொழில் செய்திருக்க வாய்புள்ளது என்பது இந்த சொல்வழக்கிலிருந்து அறிய முடிகிறது.

இன்றைய குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ரா பகுதியிலிருந்து புலம் பெயர்ந்த நெசவு தொழில் செய்யும் மக்கள் “ சௌராஷ்டிரர்கள் “ என்ற பெயருடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே, இப்படி புலம் பெயர்ந்த நெசவாளிகளில் ஒருவராக கூட கம்பர் இருந்திருக்கலாம். இந்த சௌராஷ்டிரர்கள் புலம் பெயர்ந்த காலமும் கம்பர் வாழ்ந்த காலமும் ஒன்றாக உள்ளது.

கம்பர் நெசவாளி  என்பதும், அவர் வடநாட்டில் பேசப்பட்ட சமஸ்கிருத மொழியை அல்லது அதை ஒட்டிய சௌரசேனி மொழி பேசக்கூடியவராக இருந்திருப்பார் என்றும் கூறலாம்.

எனவே, கம்பர் இன்றைக்கு தமிழ்நாட்டுல் வாழும் சௌராஷ்ட்ரா சமூகத்தை சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளது.






1 comment:

  1. நம்பமுடியவில்லை இருந்தாலும் நம்புகிறேன்

    திருவள்ளுவர் ஸௌராஷ்ட்ரா வா ? அவர் வீட்லயும் கட்டுதறி இருந்துச்சுல அதான் சும்மா எதார்தமா கேக்குரேன் சார் :)

    ReplyDelete