Saturday 31 May 2014

360 கோணத்தில் 370 சாத்தியமா ?



ஒரு விசயத்தை செய்வதற்க்கு முன்பு பல கோணங்களிலிருந்து சிந்திக்க வேண்டும். தேவைப்பட்டால் 360 கோணங்களிலிருந்தும் சிந்தித்து முடிவெடுக்கலாம்.

ஆனால் 370 கோணத்தை  எந்த கோணத்திலிருந்தும் சரியாக பார்க்க முடியவில்லை. 

சரித்திரம் புதிரானது. அதில் பல தரித்திரங்கள் உண்டு. நடந்தது என்ன என்று ஆராய தோண்டி தூர்வாறினால், மக்கி போகாத மனித கழிவுகளில் “மான்புமிகு” க்கள் புழுக்களாக நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் நடந்தவைகளை சரிசெய்ய முடியாது. நடந்து விட்டது. அன்றைய சூழ்நிலையில் சரியென தோன்றியவற்றை அப்போது செய்துள்ளனர். இன்றைய சூழ்நிலையில் அதனால் பிரச்சனைகள் ஏற்ப்படுகிறதென்றால், அன்றைய முடிவுகள் தவறு என்பது அர்த்தமல்ல. இன்றைய காலகட்டத்திற்க்கு எற்ப மாற்ற வேண்டும் என்பது பொருள்.

மாற்றம் ஒன்றே மாற்ற முடியாதது.

இன்றைய நிலையில் எதை செய்தால் குறைந்த பிரச்சனைகளுடன் அமைதியாக வாழ முடியும்.

1. இருக்கும் நிலையை அப்படியே வைத்திருப்பது.:

யாருடன் இனைந்து யாருடைய பாதுகாப்பில் வாழ்கிறார்களோ அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு ஏற்ப வாழமாட்டேன் என்றும், எங்களை கட்டுப்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறுவதும் சரியான வாதம் அல்ல. தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகளை நிரந்தரமாக வைத்து கொள்வது தவறு.

அவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு அதிகாரங்கள், சலுகைகள் என்று மற்றவர்கள் போர் குரல் எழுப்பும் போது, அனைவருக்கும் அது போல வழங்க முடியாத நிலை இருப்பதால், தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை திரும்ப பெறுவது ஒரு வழி. அதற்க்கான விவாதம் ஆரோகியமானதாக இருக்க வேண்டும். மத பின்னனியில் இதை அனுக கூடாது.

2. சுதந்திரமாக வாழ அனுமதிப்பது::

இவர்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை செலவழித்து இவர்களை பாதுகாத்தாலும் , இவர்கள் அதை அங்கீகரித்து நன்றி சொல்ல வழியில்லை. இவர்கள் காரணமாக அருகிலிப்பவர்களிடம் ஓயாத சண்டை. அதில் மனித உயிர்களும், பண விரயமும் ஏற்ப்படுகிறது. இதை தவிர்க்க நம்மிடமிருந்து பிரித்து சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கலாம்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில், இதை பிரச்சனையாக வைத்து ஓயாமல் தொல்லை கொடுத்து வருபவர்கள் அமைதியடைய கூடும். அல்லது இவர்களை அவர்களுடன் இனைத்துகொண்டு, நமக்கு மிக அருகில் இருந்து கொண்டு மிக அதிகமான தொல்லைகளை கொடுக்கவும் வாய்ப்புள்ளது.

இவர்களுக்கு சுதந்திரம் அளித்தால், எற்கனவே அதிக அதிகாரங்களும் சிறப்பு சலுகைகளும் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் தங்களையும் விடுவித்து சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டுமென்பார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சிதறி கிடந்த நிலப்பரப்புக்களை ஒருங்கினைத்த செயலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

சுதந்திரமாக அனுமதிக்கும் பட்சத்தில், தூரத்தில் இருப்பவர்கள் கூட இவர்களுக்கு உதவி செய்வதாக கூறி இவர்கள் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு, அவர்களை கட்டுப்படுத்துவதுடன் நம்மையும் கட்டுப்படுத்த முயல்வார்கள். பதற்றமான நிலை உருவாகும். எனவே சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது நடைமுறை சாத்தியமில்லை.

3. கூட்டாட்சி முறை:

எல்லோரும் எதோ ஒரு காரணத்திற்க்காக சிறப்பு சலுகைகள் கேட்பதும் கிடைக்காவிட்டால் பிரிந்து போவது தான் வழி என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இவைகளை தவிர்க்க அனைவருக்கு கட்டுப்பாடான சுதந்திரம் அளிப்பது சிறந்த வழி.

மத்தியில் இருப்பவர்கள் நம்மை அதிகாரம் செலுத்துகிறார்கள், நமக்கான நியாயமான தேவைகளை பூர்த்தி செய்வதில்லை, பாரபட்சம் காட்டுகிறார்கள் என்று நினைக்காமல், மத்தியில் இருப்பவர்கள் நமக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள், நம்மை வழி நடத்துகிறார்கள் அனைவருக்கும் பொதுவான விசயங்களில் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் முடிவெடுக்கிறார்கள் என்று உணரும் படி நடந்து கொள்ள வேண்டும். 

இந்த விசயத்தை மத அடிப்படையில் அனுகாமல், மனிதாபிமான முறையில் அனுகினால், பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது.


No comments:

Post a Comment